போலீசுக்கு இந்த கதியா? மக்கள் நிலை என்ன? அச்சத்தில் தாம்பரம் மக்கள்
Tambaram Crime: தாம்பரம் பகுதியில் 10 இடங்களில் செயின் பறிப்பு, திரைப்படம் பாணியில் நடந்த திருட்டு சம்பவம்.

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு, மறைமலை நகர் பெட்டிகடை பெண், பெண் போலீஸ் எஸ்.ஐ உள்ளிட்ட நபர்களிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது. வாகன சோதனையில் இருசக்கரவாகனத்தை விட்டுவிட்டு தப்பிய ஓடிய இரண்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிந்த இருவர் தகவல் பெற்று தாம்பரத்தில் சோதனையில் பல்சர் வாகனத்தை நிறுத்தி இருவரை விசாரித்தபோது இருசக்கர வாகனத்தை விட்டு தப்பியோட்டம்.
செயின் பறிப்பு
நேற்று இரவு 7.30 மணியளவில் மறைமலை நகரில் பெட்டிக்கடையில் ராஜேஸ்வரி (50) என்கிற பெண்ணிடம் சிகரெட் வாங்கிய இருவர் வடமொழி கலந்து பேசியுள்ளனர். அசந்த நேரத்தில் 4 சவரன் செயினை பறித்து சென்றனர், அதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம், பீர்க்கன்காரணை, சேலையூர் ஆகிய இடங்களில் செயின் பறித்த அவர்கள், தாம்பரம் காந்தி சாலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக உள்ள இந்திரா(58) என்பவரிடம் 5 சவரன் பறித்துள்ளனர்.
தொடர்ந்து வந்த புகார்கள்
மொத்தமாக 20 சவரனுக்கு மேல் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலம் என தெரிகிறது. அதே வேளையில் தொடர் செயின் பறிப்பு காரணமாக போலீசார் உஷாரான நிலையில் இரவு 10.30 மணியளவில் தாம்பரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்சர் வாகனத்தில் அதே அடையாளத்துடன் மாஸ்க் போட்ட இரண்டு நபர் வந்தவுடன் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்
அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரிந்ததால் சிசிடிவி காட்சிகள் கைபற்றிய நிலையில் வந்த நபர்கள் வடமாநில நபர்களாக இருக்கும் என என்ன சென்னை சென்ரல், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் பிடிபடவில்லை, இதனால் அவர்கள் சென்னை உள்ளே பதுங்கி இருக்கலாம் என தேடி வருகின்றனர்.
தொடரும் திருட்டு சம்பவங்கள்
தொடர்ந்து தாம்பரம் முதல் மறைமலைநகர் வரை பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை குறிவைத்து உடைமைகள் திருடப்பட்டு வருகிறது. சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்த நிலையில், மீண்டும் சென்னை புறநகர் பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக டிப்டாப் உடைய அணிந்து வந்த, இளைஞர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இரவு நேரங்களில் முறையாக ரோந்து மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இரவில் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், காவல்துறையினர் முறையாக ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றங்கள் செய்பவர்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும், இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தாம்பரம் மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

