மேலும் அறிய
Tax Revenue: வணிகவரித்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ. 3,727 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு வணிகவரித்துறை
Tamilnadu Commercial Tax Revenue: வணிகவரித்துறையில் 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் கடந்த நிதியாண்டைவிட ரூ. 3,727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் வணிகவரித்துறை ஆய்வுக் கூட்டம்
Source : TN DIPR
Commercial Tax Revenue: வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் ரூ.1040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து, போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகள் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.
வணிகவரித்துறை ஆய்வுக் கூட்டம்:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024-ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அவர்கள் தலைமையில் இன்று (09.07.2024) சென்னை. நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான சென்னை மணலியை சேர்ந்த சி. உமா மகேஸ்வரி-க்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம்) காசோலையை அமைச்சர் வழங்கினார்.
கூடுதல் வருவாய்:
வணிகவரித்துறையில் 2024-2025 ஆம் நிதியாண்டின், முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே & ஜூன்) கடந்த நிதியாண்டைவிட ரூபாய் 3,727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்படது.
அமைச்சர் அறிவுறுத்தலின்படி கடந்த 02.07.2024 அன்று வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் ரூ.1,040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணித்திறனாய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் தங்கள் கீழுள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களிடம் கலந்தாலோசித்து வரி வருவாய் அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் கோட்டத்திற்குட்பட்ட நிலுவையில் உள்ள இனங்களை ஆராய்ந்து விரைந்து முடிக்கவும், மேற்கண்ட பணிகளை செயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தரவுகளின் உண்மை தன்மையினை கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் துறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப. வணிக வரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இஆப, இணை ஆணையர் (நிர்வாகம்) , பொ. இரத்தினசாமி இ.ஆ.ப. வணிக வரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிக வரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion