மேலும் அறிய

அரசியல் அதிரடி; திருமாவுடன் பாமகவினர் சந்திப்பு- வெளியான விஜயின் மாஸ்டர் பிளான்!

விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகி உள்ளது.

விசிகவும் பாமகவும் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகி உள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இரண்டு கட்சிகளின் சந்திப்பும் திராவிடக் கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இப்போதே தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.  

கட்சிகளின் நிலை என்ன?

ஒருபுறம் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக அக்கட்சியின் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து வருகிறது. மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவும் கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்து ஆடுகிறது. 

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி அமையும், யார் யருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. இச்சூழலில் தான் வட மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாமக மற்றும் விசிக சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் எதிரெதிர் திசையில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தாலும் இந்த சந்திப்பு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நிழல்நிலை அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி அறிக்கையை வெளியிடும் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த 2025-26 ம் ஆம் ஆண்டிற்கான நிழல்நிலை அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். ராமதாஸ் வெளியிடும் இந்த நிழல்நிலை அறிக்கையில் இடம் பெறும் முக்கியமானவற்றை தமிழ்நாடு அரசும் நிறைவேற்றும். அதேபோல் அரசியல் களத்திலும் இது பேசு பொருளாக மாறும்.

இச்சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்கும் விசிக அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது திருமாவளவனிடம் நிழல்நிலை அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்ட திருமாவளவன் அடுத்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் ராமதாஸ் வெளியிட்ட நிழல்நிலை அறிக்கை குறித்து பேசுவதாக உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. எதிர் எதிர் திசையில் இருக்கும் பாமக மற்றும் விசிக-வின் சந்திப்பு பேசு பொருளாகியுள்ள நிலையில் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இதனை உற்று நோக்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக பொதுச்செயலாலர் ஆனந்தையும் சந்தித்துள்ளனர். 

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு

ஏற்கனவே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். இந்த சூழலில் பாமகவினர், அடுத்தடுத்து திருமாவளவன் மற்றும் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப் பேசி இருப்பது இவர்களுக்குள்ளான கூட்டணியை உருவாக்குவதற்கான அச்சாணி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salemVCK Alliance PMK | திருமாவுடன் பாமகவினர் சந்திப்பு உற்று நோக்கும் கட்சிகள் விஜய் மாஸ்டர் ப்ளான்Sengottaiyan vs EPS : OPS-வுடன்  ரகசிய சந்திப்பு!அடித்து ஆடும் செங்கோட்டையன்!மரண பீதியில் எடப்பாடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Indian Army Job : இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ; எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ? முழு விவரம் உள்ளே !
Indian Army Job : இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ; எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ? முழு விவரம் உள்ளே !
Virat Kohli: யாரும் பயப்படாதீங்க!  அதை இப்போ செய்ய மாட்டேன்..  விராட் கோலி சொன்னது என்ன?
Virat Kohli: யாரும் பயப்படாதீங்க! அதை இப்போ செய்ய மாட்டேன்.. விராட் கோலி சொன்னது என்ன?
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Embed widget