Video: கட்டியணைத்து வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ்: புதிய விண்வெளி வீரர்கள் மாஸ் எண்ட்ரி..பூமி வருவது எப்போது?
Nasa Astronaut Sunita Williams: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் புதிதாக வந்த விண்வெளி வீரர்களை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சியோடு கட்டியணைத்து வரவேற்றனர்.

Sunita Williams SpaceX: விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை பூமிக்கு அனுப்புவதற்காக , எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் இன்று சர்வதேச விண்வெளி மையட்திற்குள் 4 விண்வெளி வீரர்கள் வந்தடைந்தனர். பூமியில் இருந்து வந்த விண்வெளி வீரர்களை உற்சாகத்துடன் ஆரத்தழுவி வரவேற்றார் சுனிதா வில்லியம்ஸ். இந்த ஆனந்தமான காட்சியானது, சர்வதேச விண்வெளி நிலையத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரத்தழுவி வரவேற்கப்பட்ட விண்வெளி வீரர்கள்:
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முன்னெடுப்பால, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலமானது, நேற்றைய முன்தினம் ( மார்ச் 14 ஆம் தேதி ) விண்வெளிக்கு புறப்பட்டது. இந்த விணகலமானது, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
Watch the @SpaceX #Crew10 members enter the space station and join the Exp 72 crew for a long-duration space research mission. https://t.co/WHpxBz51Ts https://t.co/WHpxBz51Ts
— International Space Station (@Space_Station) March 16, 2025
க்ரூ-10 விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பான் விண்வெளி நிறுவன விண்வெளி வீரர் டகுயா ஒனிஷி மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் சென்றிருக்கின்றனர். இவர்களை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் ஆரத்தழுவி கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Crew 10 Dragon vehicle arriving! pic.twitter.com/3EZZyZW18b
— Don Pettit (@astro_Pettit) March 16, 2025
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் , சரவதேச விண்வெளி மையத்தில் மேற்கொண்டு வரும் பொறுப்புகளை , புதிய விண்வெளி வீரர்களிடம் ஒப்படைப்பார்கள். இதனை தொடர்ந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் மார்ச் 19 ஆம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பூமிக்கு திரும்புவார்கள் என நாசா விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்:
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களில் மனிதர்களை அனுப்பி சோதனை செய்யும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், முதலில் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் இருவரும் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விண்கலத்தில் திரும்புவது பாதுகாப்பு இல்லை என கருதி தவிர்க்கப்பட்டது. இதை சரிசெய்ய நாசா தொடர்ந்து தீவிர முயற்சி செய்தும், பலனளிக்கவில்லை.
இதையடுத்து, விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பூமிக்கு அழைத்து வருவில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை பூமிக்கு கொண்டு வர எலான் மஸ்க்கிற்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீட்க திட்டமிடப்பட்டது. அதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் க்ரு ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது.
பூமி திரும்பும் விண்வெளி வீரர்கள்:
இதையடுத்து, இருவரும் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக திட்டமானது ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மார்ச் மாதம் பூமி திரும்புவார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்றைய முன்தினம், மாற்று வீரர்கள் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது ( Docking ). இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்கள் மார்ச் 19 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பிறகோ பூமிக்கு திரும்புவார்கள் என நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், விண்வெளி வீரர்களை பார்த்ததும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி கட்டியணைத்து வரவேற்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

