ரூ 75 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்.. சிக்கியது எப்படி
கர்நாடக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் சிக்கியுள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பிலான 37 கிலோ போதைப்பொருள் இன்று சிக்கியுள்ளது. நைஜீரிய நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களிடம் இருந்து இந்த போதைப்பொருளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக வரலாற்றிலேயே ஒரு நாளில் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இதுவாகும்.
நைஜீரிய பெண்களை மடக்கி பிடித்த போலீஸ்:
எல்லை பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் சிக்கியுள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.
நைஜீரிய நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களிடம் இருந்து 37 கிலோ போதைப்பொருளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் அனுபம் அகர்வால் கூறுகையில், "டெல்லியில் இருந்து விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, டிராலி பைகளில் எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருள் எடுத்துச் சென்றபோது, பம்பா ஃபான்டா (31) மற்றும் அபிகேல் அடோனிஸ் (30) என அடையாளம் காணப்பட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு:
அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18,000 ரொக்கமும் மீட்கப்பட்டன. அவர்கள் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். இந்தியா முழுவதும் எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
விமானம் மூலம் போதைப்பொருளை கடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 37 முறை மும்பைக்கு சென்றுள்ளனர். 22 முறை பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, வணிக விசாவில் ஃபான்டா இந்தியா வந்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவில்தான் அடோனிஸ் வசித்து வருகிறார். இரண்டு பெண்களும் கடந்த 1-2 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு மங்களூருவில் 15 கிராம் எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருளுடன் ஹைதர் அலி என்ற நபரை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் விசாரணைகள் மூலம் அதிகாரிகள் பெங்களூரில் 6 கிலோ எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பீட்டர் என்ற நைஜீரிய நாட்டவரைப் பிடித்தனர்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

