Income Tax Bill: இனி எல்லாமே புதுசு தான் - புதிய வருமான வரி மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல், அடுத்து என்ன?
Income Tax Bill: பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Income Tax Bill: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய வருமான வரி மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய வருமான வரி மசோதா
இந்தியாவின் வரி கட்டமைப்பை எளிமைப்படுத்துவதையும் இணக்க நடைமுறைகளை நவீனமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படலாம். 1961 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டத்திற்கு மாற்றாக, புதுப்பிக்கப்பட்ட சட்டம், சட்ட சிக்கல்களைக் குறைப்பதற்கும் கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தாமல் வரி செலுத்துவோருக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்பட உள்ள இந்த மசோதா, 2026-27 மதிப்பீட்டு ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வரி அடுக்குகள் & விகிதங்கள்
எற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி அமைப்பில் நெறிப்படுத்தப்பட்ட வருமான அடுக்குகள் இடம்பெறும். அவை,
- ரூ.4,00,000 வரை: வரி இல்லை.
- ரூ.4,00,001 முதல் ரூ.8,00,000 வரை: 5 சதவிகிதம்
- ரூ.8,00,001 முதல் ரூ.12,00,000 வரை: 10 சதவிகிதம்
- ரூ.12,00,001 முதல் ரூ.16,00,000 வரை: 15 சதவிகிதம்
- ரூ.16,00,001 முதல் ரூ.20,00,000 வரை: 20 சதவிகிதம்
- ரூ.20,00,001 முதல் ரூ.24,00,000 வரை: 25 சதவிகிதம்
- ரூ. 24,00,001 மற்றும் அதற்கு மேல்: 30 சதவிகிதம்
எளிதான இணக்கம் & குறுகிய சட்ட உரைகள்
முன்மொழியப்பட்ட மசோதாவின் முக்கிய நோக்கம் சட்ட மொழியை நெறிப்படுத்துவதும், வரி விதிமுறைகளின் ஒட்டுமொத்த அளவை 50 சதவிக்தம் குறைப்பதும் ஆகும். இந்த மசோதாவில் குறுகிய வாக்கியங்கள், தெளிவான விதிகள் மற்றும் சுருக்கமான விளக்கங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் சராசரி வரி செலுத்துவோர் வரிச் சட்டங்களைப் புரிந்துகொள்வதையும் பின்பற்றுவதையும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மசோதா எளிமைப்படுத்தலுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அமைப்பில் நியாயத்தைப் பேணுகையில் சில மீறல்களுக்கான அபராதங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகவும் நிதிச் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
சுமையை குறைக்க முயற்சி:
முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது வர் விவகாரம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துஷ்பிரயோக எதிர்ப்பு விதிகளுக்கு தெளிவான வரையறைகள் மற்றும் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், கடந்த காலங்களில் சர்ச்சைகளுக்கு வழிவகுத்த தெளிவின்மைகளை நீக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல வரி விதிப்புகளை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த அமைப்பாக மாற்றுவது உட்பட மேலும் சீர்திருத்தங்களை வரி நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையைக் குறைக்கின்றனர். நிர்வாகச் சுமைகளைக் குறைப்பதிலும், வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மை கொண்ட சூழலை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி, இந்தியாவில் நவீன, நெறிப்படுத்தப்பட்ட வரி முறையை உருவாக்குவதற்கான ஒரு படியாக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

