ஈசி கேட்சை இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே! குற்ற உணர்ச்சியில் ஷதாப் கான்.. அச்சோ பாவம்
ஹாரிஸ் ராப் வீசிய பந்தை மிட்செல் ஹே அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் வாங்கி மேலே செல்ல, ஷதாப் கான், அதை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், மிக எளிதான கேட்சை மிஸ் செய்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் ஷதாப் கான்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முக்கிய தருணத்தில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் எளிதான கேட்சை மிஸ் செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் கூனி குறுகும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈசி கேட்சை மிஸ் செய்த ஷதாப் கான்:
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி 2025இன் முதல் சுற்றில் இருந்தே பாகிஸ்தான் அணி வெளியே அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சுமாரான பேட்டிங், மோசமான பவுலிங், படுமோசமான ஃபீல்டிங் என பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் செய்த அதே தவறை பாகிஸ்தான் அணி வீரர்கள் மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர். இந்த ஆட்டத்தில் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் பாகிஸ்தான் அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் எளிதான கேட்சை மிஸ் செய்துள்ளார். கேட்சை மிஸ் செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் அவர் கூனி குறுகும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ இதோ:
மழை வந்து குறுக்கிட்ட இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. இலக்கு சற்று கடினமாகத் தெரிந்தாலும், நியூசிலாந்து தொடக்க வீரர்கள் வெறும் 5 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்து, பாகிஸ்தான் அணி பவுலர்களை மிரட்டி எடுத்தனர்.
— kuchnahi123@12345678 (@kuchnahi1269083) March 18, 2025
ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்துகளை நாலா புறமும் திருப்பி அடித்தனர். அப்போதுதான், ஹாரிஸ் ராப் வீசிய பந்தை மிட்செல் ஹே அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் வாங்கி மேலே செல்ல, ஷதாப் கான், அதை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், மிக எளிதான கேட்சை மிஸ் செய்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் ஷதாப் கான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

