Traffic இருக்கவே கூடாது ! சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; ரூ.98 கோடி மதிப்பில் சாலை பணி தீவிரம்
Chennai Trichy National Highway: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சார்பில், ரூ.72.54 கோடி மதிப்பீட்டில், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, ஐக்காம்பேட்டை மற்றும் ரூ.25.75 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் தொடங்கியது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை Chennai - Trichy Highway
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சர்வீஸ் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் முத்தாம்பாளையம், எல்லீஸ் சத்திரம், இருவேல்பட்டு மற்றும் அரசூர் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு மாவட்டஆட்சியர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், ரூ.72.54 கோடி மதிப்பீட்டில், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, ஐக்காம்பேட்டை மற்றும் ரூ.25.75 கோடி மதிப்பீட்டில் பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், வாகனங்கள் செல்வதற்காக சாலையின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எல்லீஸ் சத்திரம் பகுதியில், ரூ.22.65 கோடி மதிப்பீட்டிலும், இருவேல்பட்டு பகுதியில் ரூ.18.03 கோடி மதிப்பீட்டிலும், அரசூர் பகுதியில் 46.98 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளின் முன்னேற்றம் மற்றும் அரசு வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேம்பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ரூ.27.72 கோடி மதிப்பீட்டில் முத்தாம்பாளையம் அருகில், மேம்பாலம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிறிய வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை நாள்தோறும் அதிகளவில் சென்றுவரக்கூடிய நெடுஞ்சாலையாக இருப்பதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மேம்பாலம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேம்பாலம் பணி நடைபெறும் பகுதிகளில், வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை மற்றும் மாற்றுச் சாலைகள் தொடர்ந்து போக்குவரத்திற்கு ஏதுவாக தரமானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பணிகள் நடைபெறுவது குறித்து, வாகன ஒட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை தெரிவிக்கும் வகையில், 500 மீட்டருக்கு முன்பாகவே மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவருகிறது என்பது குறித்து தகவல் பலகையினை ஆங்காங்கே அமைப்பதோடு, பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் சீராக சென்றிடும் வகையில் சாலைகளில் வேகத்தடைகள் அமைத்திட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பெரும்பாலான பணிகள் இரவு நேரங்களில் நடைபெறுவதால் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், பணியாளர்களுக்கு ஒளிரும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். ஆய்வின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், திட்ட இயக்குநர் வரதராஜன், பொறியாளர் செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

