பிரியாணி சாப்பிடக்கூடாது என ஹோட்டல் கட்டுப்பாடு..கடுப்பான தோனி..அர்த்தராத்திரியில் செய்த செயல்
அம்பதி ராயுடு வீட்டில் இருந்து வந்த பிரியாணியை ஹோட்டல் நிர்வாகிகள் அனுமதிக்க மறுத்ததும் கடுப்பான எம்.எஸ் தோனி ஓவர் நைட்டில் ஹோட்டலையே மாற்றியுள்ளார்

பொறுமைக்கு பெயர் போனவர் எம். எஸ் தோனி. ஆனால் தோனியே கடுப்பான சில அரிய சம்பவங்களும் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியின் போது நடைபெற்றுள்ளது.
பிரியாணியை அனுமதிக்க மறுத்த ஹோட்டல் நிர்வாகிகள்
2014 ஆம் ஆண்டு ஐ.பி. எல் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத் அணி சென்றது. ITC Grand Kakatiya ஹோட்டலில் சென்னை அணி தங்கியிருந்தது. மொத்தம் 109 அறைகள் இந்த ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் போர்ட் சார்பாக புக் செய்யப்பட்டிருக்கின்றன. சி.எஸ்.கே அணிக்காக அந்த அணியின் வீரர் அம்பதி ராயுடு வீட்டில் இருந்து ஸ்பெஷல் பிரியாணி வந்துள்ளது.
ஆனால் வெளியியில் இருந்து சாப்பாடு வருவதை ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது. கடும் வாக்குவாதத்திற்கு வீரர்களை தங்களது அறையில் வைத்து பிரியாணி சாப்பிட அனுமதித்துள்ளது. இதனால் கடுப்பான தோனி ஓவர் நைட்டில் ஹோட்டலையே மாற்றியுள்ளார். ஒட்டுமொத்த சென்னை அணியும் தாஜ் க்ரிஷ்ணா ஹோட்டலுக்கு மாறி அம்பதி ராயுடு வீட்டில் இருந்த வந்த பிரியாணியை சாப்பிட்டார்கள்.
சென்னை Vs மும்பை
நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி வரும் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி அணிகள் மோதும் நிலையில், இரண்டாவது போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 19ம் தேதி ( நாளை மறுநாள்) காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. இந்த டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாக நடக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

