மேலும் அறிய

DMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!

திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை பேரனுக்கு பேனர் வைத்து, போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை என கூறி திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் நாளை திருமா முன்னிலையில் விசிகவில் இணைய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த எழில் அரசன் கடந்த 2024 செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக எங்களைக் கட்சியிலிருந்து நீக்குங்கள் என விருப்பம் தெரிவித்து அந்த மனுவை திமுக மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரனிடம் வழங்கி உள்ளார். ஆனால், மனுவை வழங்கி நான்கு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை திமுகவிலிருந்து யாரும் என்னிடம் இதுகுறித்து பேசவில்லை. இதன் காரணமாக திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். 

மேலும், அந்த பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த சேலம் எழில் அரசன் ஆகிய நான் 04.02.2025 முதல் கீழ்காணும் காரணங்களால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி., நன்றி.!" என பதிவிட்டிருந்தார். இது திமுகவின் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எழில் அரசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் வீட்டிற்கு வெளியில் படுகொலை செய்யப்படுகிறார். மதுரையில் ஜல்லிக்கட்டின் போது மாவட்ட ஆட்சியர் பேரனுக்கு இருக்கையை அளித்தது. அமைச்சர் மூர்த்தி தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆண்ட பரம்பரை என்றும், தலித்துகளுக்கு எதிராக பேசியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் நீண்ட நாட்களாக மனதில் உறுத்தி கொண்டிருந்தது. இதன் காரணமாக திமுகவில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளேன். திமுகவில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை, இதனால் கட்சியிலிருந்து நீக்குமாறு விருப்பம் தெரிவித்த நிலையில் இதுவரை யாரும் அழைத்துப் பேசாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு திமுகவில் நான் வகித்து வந்த பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் என்னை விலக்கிக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும், நாளை சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து தன்னை விசிகவில் நினைத்துக் கொள்ள உள்ளேன் என்றும் கூறினார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் நுண்ணீர் பாசனம் ஆய்வு: விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, மானியப் பலன்!
விருதுநகரில் நுண்ணீர் பாசனம் ஆய்வு: விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, மானியப் பலன்!
வறட்சியைத் தாங்கி அமோக விளைச்சல் தரும் சம்பா விதைகள்: மானிய விலையில் வாங்குவது எப்படி?
வறட்சியைத் தாங்கி அமோக விளைச்சல் தரும் சம்பா விதைகள்: மானிய விலையில் வாங்குவது எப்படி?
SBI Junior Associate வேலை (9,124 காலிப்பணியிடங்கள்) இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
SBI Junior Associate வேலை (9,124 காலிப்பணியிடங்கள்) இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
Embed widget