மேலும் அறிய
இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய பத்தாயிரம் லஞ்சம் ! சிக்கிய நகராட்சி துப்புரவு ஆய்வாளர்
இறப்பு சான்றிதழ் பதிவு செய்வதற்கு பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது.

லஞ்சம் வாங்கிய விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது
Source : ABP NADU
விழுப்புரம்: இறப்பு சான்றிதழ் பதிவு செய்வதற்கு பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் நகராட்சி துப்புறவு ஆய்வாளர் மதன் குமாரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைவும் களவுமாக கைது செய்தனர்.
விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவரின் தந்தை கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்தையடுத்து இறப்பு சான்றிதழ் பதியாமல் விட்டுள்ளார். தந்தை இறப்பு சான்றிதழ் பதிவு செய்வதற்காக விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளராக உள்ள மதன்குமார் பத்தாயிரம் லஞ்சம் கோட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத காத்தமுத்து இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காத்தமுத்துவிடம் ரசாயனம் கலந்த பத்தாயிரம் ரூபாயை கொடுத்து லஞ்சம் கேட்ட நகராட்சி ஆய்வாளரிடம் கொடுக்க கூறியுள்ளார். அதன் பேரில் பாண்டியன் நகரில் வசிக்கும் மதன்குமாரிடம் காத்தமுத்து லஞ்ச பணமாக பத்தாயிரத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் அழகேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து கைது செய்த மதன்குமாரை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து முறைகேடாக பிறப்பு இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரனை செய்தனர்.
லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியருக்கு நான்கு ஆண்டுகள் சிறை!
மதுரையில் கல்விக்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1 லட்சத்து 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கனரா வங்கிக் கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர் சாமுவேல் ஜெபராஜ். இதே வங்கியில் தற்காலிகப் பணியாளராக நாராயணன் என்பவர் பணியாற்றினார். இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் தாதிக்கான படிப்பில் சேர்வதற்கு கல்விக் கடன் கேட்டு கடந்த 2010ல் விண்ணப்பித்தார். அவர் கோரியிருந்தபடி கல்விக் கடனை வழங்க ரூ.8,000 லஞ்சம் பெற்றதாக சிபிஐ காவலர்கள் சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த 2018ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் சாமுவேல் ஜெபராஜ் இறந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக அரசு கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் கடன் வழங்குகின்றன.
இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாமல் மோசடி செய்வது, லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது. செல்வாக்கு உள்ளவர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளார்.
இந்த வழக்கின்படி மாணவிக்கு ரூ.62,500 கல்விக்கடன் வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் நாராயணனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இவருக்கு 3 பிரிவுகளில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையிலிருந்து இந்த வங்கியில் கல்விக் கடன் கேட்ட இரு மாணவிகளுக்குத் தலா ரூ.35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















