IPL 2025: உங்களுக்கு சாத்தியமானது எப்படி? தோனியின் ஃபிட்னஸ் ரகசியம் பகிந்த ஹர்பஜன் சிங்!
IPL 2025: ஐ.பி.எல். தொடர், எம்.எஸ். தோனி பற்றி ஹர்பஜன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐ.பி.எல். தொடருக்கு தோனி எப்படி தயாராகிறார் என்பது பற்றி ஹர்பஜன் சிங் பகிந்துகொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் பயணைத்தில் இது 25-வது ஆண்டு. சர்வதேச கிரிக்கெட்டில் இருர்ந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மார்ச், 23-ம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கிறார். இது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் 2000, ஜனவரில் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். 2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் விளையாட இருக்கிறார். 42-வயதில் ரன்னிங் பிடிவீன் தி விக்கெட்ஸ், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அவர் ஸ்டைல் மிளிர்வது குறையவில்லை என்றே சொல்லலாம். 40 வயதிற்கு பின்னரும் கிரிக்கெட்டில் அவர் தொடர்வது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஹர்பஜன் சிங், தோனியிடம் ‘ கிரிக்கெட் தளத்தில் தொடர்ந்து செயல்படுவது கடினமாக இல்லையா?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு தோனி அளித்த பதில் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும் அதுவே நிதர்சனம் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வயதிலும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது குறித்து அவர் பதிலளிக்கையில்,” எனக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் இதை நான் விரும்பி செய்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை என்ஜாய் பண்றேன். மாலை 4 அல்லது 5 மணி ஆகிவிட்டால் எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தோணும். நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். உன்னுள அந்த தாகம் இருக்கும்வரை ஒரு விசயத்தை செய்யாமல் இருக்க முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார்.
Just Thala casually making us melt! 🥹💛 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/7Z5nPusqAh
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2025
எம்.எஸ். தோனி 2020ம் ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியி அரையிறுதியில் கடைசியாக விளையாடினார். அன்றிலிருந்து ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபலம், முதன்மையான அடையாளம் என்பதாகவும் தோனி இருந்தாலும் அவருடைய விளையாட்டை அவர் புதுப்பித்து கொண்டேயிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தோனி பேட்டிங்கில் அதிக ரன் எடுக்கவில்லையென்றாலும், மைதானத்தில், போட்டியில் அவருடைய பங்களிப்பு இருக்கும். தோனி காயம் காரணமாக சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லப்பட்டாலும் இந்த சீசனில் அவருடைய ஃபிட்னஸ் வெளிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கடினமானதும் கூட சிலர் தெரிவிக்கின்றனர்.
ஐ.பி.எல். தொடருக்கு தயாராவது பற்றி..
தோனி கிரிக்கெட் விளையாடனும் என்பதை விட சிறப்பாக விளையாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார். தொடருக்கு முன்பே, பேட்டிங், பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது ஆகியவற்றிற்கு பயிற்சி எடுக்கிறார். இவை அவருக்கு தொடரில் சிறப்பாக செயல்பட உதவும். சூழலுக்கு ஏற்றார்போல அவர் செயல்படவில்லை. சூழல் எப்படி இருந்தாலும் அதை தன்வசப்படுத்தும் மாயம் தெரிந்தவர் தோனி. அவர் பயிற்சி எடுப்பது அவருக்கு உதவியாக இருக்கிறது என்று ஹர்பஜன் தெரிவித்தார்.
தோனி ஐ.பி.எல். தொடருக்கு தயாராவது பற்றி ஹர்பஜன் சிங் தெரிவிக்கையில்.” அவர் எல்லா வகையான பவுலிங்கையும் எதிர்கொள்ள தொடர் ஆரம்பிக்கும் முன்பே 2-3 மாதங்களுக்குப் பயிற்சி எடுக்கிறார்.” எனத் தெரிவித்தார்,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

