பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
தமிழ்நாடு அரசு தொழில் தொடங்குவதற்காக தனிநபருக்கு ரூபாய் 15 லட்சம் வரை கடன் வழங்குகிறது. அதை எவ்வாறு பெறுவது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு துறையின் கீழும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசு பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனிநபர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடன் திட்டம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
சிறு தொழில், வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதிகபட்ச கடன் தொகை ரூபாய் 15 லட்சம் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூபாய் 1.25 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற தகுதிகள் என்னென்ன?
1. பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினராக இருக்க வேண்டும்.
2. ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
3. இந்த திட்டத்தில் பயன் பெற வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
4. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் பயன் பெற முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. சாதிச்சான்றிதழ்
2. வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
4. ஓட்டுநர் உரிமம்
5. ஆதார் அட்டை
எப்படி விண்ணப்பிப்பது?
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகங்கள்,
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
மாவட்ட/ மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள்/ கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், டாப்செட்கோவின் இணையதளத்தில் www.tabcedco.tn.gov.in சென்றும் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பங்கு 5 சதவீதம் ஆகும். கடனைத் திரும்பிச் செலுத்த 3 முதல் 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும்,
ரூபாய் 1.25 லட்சம் வரை 7 சதவீதம் வட்டியும்,
ரூபாய் 1.25 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை 8 சதவீத வட்டியும்
ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை 8 சதவீத வட்டியும் ஆகும்.
இந்த திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

