மேலும் அறிய

வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?

நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ள பெரியார் நகர் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிப்ரவரி 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை

வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையின் பின்புறம் நோயாளிகளுக்காக நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் காக்கர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்..

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பெரியார் நகர் மருத்துவமனை 2021 ஆம் ஆண்டு  300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.  2021 ஆம் ஆண்டு  ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் சி.டி ஸ்கேன், சிஎஸ்ஆர் பங்களிப்புடன் 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய அவசர ஊர்தி வசதிகள், ஒரு கோடிக்கு செலவிலான பத்து படுக்கை வசதிகள் கொண்ட டயாலிசிஸ் பிரிவு, இந்த மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு 2 முக்கால் கோடி செலவில் நவீன உபகரணங்கள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள் 1 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம், ஒரு கோடியில் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது.

71 கோடியே  81 லட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய மூன்று தலங்களுடன் கூடிய கட்டிடத்தை கட்டுவதற்கு 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பெரியார் மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்திட 54 கோடியே 82 லட்சம் செலவில் புதிய கட்டுமான பணிகளுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 

109 கோடியே  89 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடப் பணிகள்,   100 கோடியே  91 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள்,   ரெண்டு கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் நீரூற்று பணிகளுள் என 211 கோடியே 78 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் மருத்துவ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய கட்டிட வசதிகள் 7 தளங்களும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த கட்டிடத்தை பொருத்தவரை புதியதாக 560 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. 860 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையாக மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 102 மருத்துவர்கள் 236 செவிலியர்கள்  79 மருத்துவ சாரா பணியாளர்கள்,  126 மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 240 தூய்மை பணியாளர்கள் மிக விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 

வருகிற 28ஆம் தேதி மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட உள்ளது. பின்னர் குளிரூட்டப்பட்ட தனியரைகள்,  நுன் கிருமி நீக்க நிலையம், நவீன சலவையகம் மத்திய மருந்தகம் மத்திய ஆய்வகம் உதவி மையம் வழிகாட்டு தகவல் சிற்றுண்டியகம் காத்திருப்போர் அறை என ஏராளமான புதிய கட்டமைப்புகள் அமைந்திருக்கிறது.

84 கோடியே 17 லட்சம் ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நிதியாதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

டயாலிசிஸ் - அரசு நிர்வாகம் தான்

மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது அதனை முன்னிட்டு  வருகிற 28 ஆம் தேதி இந்த மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். டயாலிசிஸ் பொருத்துவரை அரசின் நிர்வாகம் தான் செய்து கொண்டிருக்கிறது. இதில் அவுட்சோர்சிங் எதுவும் கிடையாது.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. எல்லா பருவ காலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு வருவது இயற்கை. தமிழகத்தை பொறுத்தவரை உள்ளாட்சி நிர்வாகங்கள் கொசு உற்பத்தியை தடுப்பதில் மிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Embed widget