மேலும் அறிய

சிம்பொனி அரங்கேற்றிய பின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு விசிட் அடித்து மனம் உருகி வேண்டிய இளையராஜா!

முதல் முறையாக சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றிய பிறகு நாடு திரும்பிய இளையராஜா திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

மார்ச் 8-ஆம் தேதி, இசை மேதை இளையராஜா லண்டனில் உள்ள அப்பல்லோவில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலமாக ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா நிகழ்த்தினார். இதற்கு இளையராஜாவிற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்து வாழ்த்து குவிந்தது. இதையடுத்து நாடு திரும்பிய இளையராஜாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை சாகசத்தை தமிழக அரசு நினைவுகூரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பின்னர் அடுத்தடுத்து பல பிரபலங்கள் இவரை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பிரதமர் மோடியை டெல்லிக்கு சென்று சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்று இளையராஜா வெளியிட்ட நிலையில் அது வைரலாக பார்க்கப்பட்டது.

சிம்பொனி அரங்கேற்றிய பின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு விசிட் அடித்து மனம் உருகி வேண்டிய இளையராஜா!

இதை தொடர்ந்து, இளையராஜா தமிழகத்தில், கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலுக்கு சென்ற இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உளது. ராகு தோஷத்தை நீக்க கூடிய சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கக் கூடிய இந்த கோயிலுக்கு வருகை புரிந்த இளையராஜா, கோயிலின் தென் மேற்கு மூலையில் உள்ள நாகவள்ளி, நாக கன்னியுடன் இருக்கும் ராகு பகவானை வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து ராகு கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியிலுள்ள தென்காளஹஸ்தி என்று சொல்லப்படும் பாம்புரநாதா கோயிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டுள்ளார். சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா கோயிலுக்கு வருவதை அறிந்த பக்தர்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளனர். மேலும், ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget