Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”
அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவது சீமானுக்கு வழக்கமாக உள்ளது நீதிமன்றத்தில் ஆஜராகி நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் இது போன்று பேசுவதை சீமான் நிறுத்துவார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சீமானை கிழித்து தொங்க விட்டுள்ளார்.
தினந்தோறும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மிகவும் வேதனையாகவும் சிரமமாகவும் உள்ளது என்று சீமான் தரப்பு உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்களிடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இன்று நீதிபதி சீமான் மற்றும் அவரது வழக்கறிஞரை கிழித்து தொங்க விட்டு விட்டார். வாய் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று சீமான் நினைக்கக் கூடாது.
ஒவ்வொரு நாளும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞரிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் மனுதாரர் சீமான் அவதூறாகவும் திமிராகவும் வரம்பு மீறி பேசுகிறார். அப்பொழுது வழக்குப்பதிவு செய்ய தானே வேண்டும். நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று தெள்ளத் தெளிவாக கூறி விட்டார்.
வழக்கு வேண்டாம் என்றால் வாயை கட்டுப்படுத்த சொல்லுங்கள் என்று காட்டமாக நீதிபதி உத்தரவிட்டார். ஜனநாயக நாட்டில் குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் Article 19 இன் படி எந்த அவதூறை வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என்று சீமான் கணக்கு போட வேண்டாம். தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார். சமுதாயத்தில் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை. கையில் எடுக்க வைத்து விடாதீர்கள்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும். தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார். நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல் எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார் என்று நீதிபதி வேல்முருகன் சீமானை கடுமையான வார்த்தையில் சாடி எச்சரித்துள்ளார்.




















