மேலும் அறிய

Rasipalan Today Nov 5: சிம்மத்துக்கு தடைகள் விலகும் ; கன்னிக்கு புதிய வீடு- உங்கள் ராசிக்கான பலன்?

Rasi Palan Today, November 5: நவம்பர் மாதம் 5ஆம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 5, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விளையாட்டு சார்ந்த  செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சலம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
 
 கடக ராசி
 
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பயம் மறையும் நாள்.
 
 சிம்ம ராசி
 
பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.
 
 கன்னி ராசி
 
வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.
 
தனுசு ராசி
 
நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். அரசு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உணர்ச்சி விவேகம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். சிரமம் விலகும் நாள்.
 
கும்ப ராசி
 
சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.
 
மீன ராசி
 
உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவு மேம்படும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயப் பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget