மேலும் அறிய

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்

பல்லடத்தில் மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்த்தை அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 22 வயதான இவரது மகள் வித்யா கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 30 ம் தேதி வீட்டில் வித்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வித்யா மீது பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார் திவ்யாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில், தனது தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் வாக்குமூலம் கொடுத்து அதிரவைத்தார். வித்யாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும்  தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை நடந்துள்ளதாக எதிர்ப்பு குரல் எழுந்தது.

இந்தநிலையில் இது ஆணவக் கொலை கிடையாது என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். வித்யாவை நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் சொன்னதால் 2 பேரும் பேசாமல் இருந்ததாகவும், காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்த போது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்றும் திருப்பூர் எஸ்.பி விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா? வாய் விட்ட சு.வெங்கடேசன்.. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த பதிலடி!
இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா? வாய் விட்ட சு.வெங்கடேசன்.. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த பதிலடி!
நூலகப் புத்தக ஊழல்: 20 ஆண்டு அறிக்கை, AI முறைகேடு... உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
நூலகப் புத்தக ஊழல்: 20 ஆண்டு அறிக்கை, AI முறைகேடு... உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
கடலில் குதித்த 2 பேர் என்ன ஆனார்கள்? பாம்பன் ரயில் பாலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. உச்சக்கட்ட பரபரப்பு
கடலில் குதித்த 2 பேர் என்ன ஆனார்கள்? பாம்பன் ரயில் பாலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. உச்சக்கட்ட பரபரப்பு
தூத்துக்குடி மக்களே உஷார்! நாளை 7 மணி நேரம் மின்தடை – முழு பகுதிகள் பட்டியல்!
தூத்துக்குடி மக்களே உஷார்! நாளை 7 மணி நேரம் மின்தடை – முழு பகுதிகள் பட்டியல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Embed widget