மேலும் அறிய
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasi Palan Today, November 23: இன்று கார்த்திகை மாதம் 8ம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

ராசிபலன்
Source : Abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 23, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
ரிஷப ராசி
அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
மிதுன ராசி
விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.
கடக ராசி
பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மறதி குறையும் நாள்.
கன்னி ராசி
மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிம்மதி கிடைக்கும் நாள்.
துலாம் ராசி
பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
விருச்சிக ராசி
வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பெருமை மேம்படும் நாள்.
தனுசு ராசி
வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.
மகர ராசி
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
கும்ப ராசி
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
மீன ராசி
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கவனம் வேண்டிய நாள்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
திருச்சி
Advertisement
Advertisement