விராட் கோலி முறியடிக்கக்கூடிய 10 சாதனைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இதை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 458 ரன்கள் தேவை.
விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து ஜாக் ஹாப்ஸ் 9 சதங்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலி 4 சதம் அடிக்க வேண்டும்.
அடிலெய்டு மைதானத்தில் (விசிட்டிங் பேட்ஸ்மேன்) ஆல் டைம் ரன் குவித்தவராக மாறுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 93 ரன்கள் மட்டுமே தேவை.
ஆஸ்திரேலியாவில் ஒரே மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் தேவை.
இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 209 பவுண்டரிகள் அடித்துள்ளார். இதை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 59 பவுண்டரிகள் தேவை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் சச்சின் டெண்டுல்கர். இதை முறியடிக்க விராட் கோலி 3 போட்டிகளில் விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 20 சதங்கள் அடித்துள்ள நிலையில் அந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 5 தேவைப்படுகிறது.
விராட் கோலி ஏற்கனவே 66 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். 4 கேட்ச்சுகளை பிடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் பெருமை விராட் கோலியை சேரும்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 496 பவுண்டரிகள் அடித்துள்ளார், மேலும் 4 பவுண்டரிகளை அடித்தால் 500 பவுண்டரிகளை அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெறுவார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (764), பிரையன் லாரா (550) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.