Today Rasipalan, November 08: மேஷத்துக்கு பெருமை...தனுசுக்கு உதவி...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள் - 08.11.2023 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
ரிஷபம்
குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். நினைத்த சில பணிகள் தாமதமாக முடிவுபெறும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான கனவுகள் தோன்றும். முயற்சிகள் மேம்படும் நாள்.
கடகம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபார கொள்முதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
கன்னி
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களில் மித வேகம் நன்று. வியாபார போட்டிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.
துலாம்
பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு நிகழும். வாடிக்கையாளர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். சிந்தனை மேம்படும் நாள்.
விருச்சிகம்
அனுபவப்பூர்வமான பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறைமுகமான வரவுகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு கூடும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபார போட்டிகள் குறையும். உதவி நிறைந்த நாள்.
மகரம்
சிந்தனைகளில் கவனம் வேண்டும். தொழில் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். யாரிடத்திலும் முன்கோபமின்றி செயல்படவும். உத்தியோகத்தில் சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பைத் தரும். வருத்தம் நிறைந்த நாள்.
கும்பம்
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பயணம் நிறைந்த நாள்.
மீனம்
முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிலரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஒப்பந்த முயற்சிகளில் நினைத்தது நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். நற்செயல் நிறைந்த நாள்.