மேலும் அறிய

Today Rasipalan, November 25: சிம்மத்துக்கு லாபம்...மீனத்துக்கு நிறைவு...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 25.11.2023 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலுவல் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் விஷயத்தில் விவேகத்துடன் இருக்கவும். சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பயனற்ற சிந்தனைகளைக் குறைப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். தந்தையின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்

ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த இன்னல்கள் குறையும். கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் கோபத்தை விடுத்து விவேகத்துடன் செயல்படவும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.

கடகம்

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தனித்துச் செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். மறைமுகமான சில போட்டிகள் குறையும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

கன்னி

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும்.  தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் நிதானம் அவசியமாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவுகளில் மாற்றம் ஏற்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரப் பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

தனுசு

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவ கருத்துகள் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவு மேம்படும். விரயம் நிறைந்த நாள்.

மகரம்

மாணவர்களுக்குக் கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூமி விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளியூர் வர்த்தகப் பணிகளில் மேன்மையான சூழல் அமையும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆக்கம் நிறைந்த நாள்.

கும்பம்

செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சகோதரர் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படலாம். இயந்திரம் சார்ந்த பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பரிசுகள் நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் விருப்பம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வர்த்தகப் பணிகளில் ஆலோசனைகள் பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். நிறைவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget