Rasipalan 10, June 2023: துலாமுக்கு உற்சாகம்... தனுசுக்கு பாசம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 10: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 10.06.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அன்பு நிறைந்த நாள்.
மிதுனம்
இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். தனவரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மனவளக்கலையில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். தொழில் சார்ந்த பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். கவலைகள் குறையும் நாள்.
கடகம்
செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். அதிகார பதவியில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
சிம்மம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். சகோதரர் வழியில் ஆதரவு உண்டாகும். வெளியூர் வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய பரிணாம மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
கன்னி
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. பிடிவாத போக்கினை குறைத்து சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். காப்பீடு துறைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் பிறக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விவேகம் நிறைந்த நாள்.
துலாம்
கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பணி சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளால் ஆதரவு மேம்படும். போட்டிகள் குறையும் நாள்.
தனுசு
சிந்தனைகளில் புதிய தெளிவு பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பாசம் நிறைந்த நாள்.
மகரம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். கல்விப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மறதிகள் குறையும் நாள்.
கும்பம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். சிறு வியாபார பணிகளில் ஆர்வம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் புரிதல் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் புதிய தேடல் பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். புரியாத சில கேள்விகளுக்குத் தெளிவு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.