மேலும் அறிய

முப்போகம் விளைந்த பூமியில் தற்போது ஒருபோக சாகுபடிக்கே திட்டம் - கலங்கி நிற்கும் விவசாயிகள்

முப்போகம் சாகுபடி செய்த நாங்கள், ஒருபோக சாகுபடி கூட  செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்போகம் சாகுபடி செய்த நிலையில் தற்பொழுது ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தங்களுக்கு  குருவைத் தொகுப்பு திட்டம் போல் ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்யும் தங்களுக்கு சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டுமென கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கடைமடை பகுதி

மயிலாடுதுறை மாவட்டம் என்பது டெல்டா மாவட்டத்தின் காவிரி கடைமடை பகுதியாகும். அதிலும் மாவட்டத்தின் பெரும்பகுதி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் காவிரி நீரும் பல நேரங்களில் எட்டாக்கனியாகவே மாவட்ட விவசாயிகளுக்கு இருந்து வருகிறது. மேட்டூரில் காவிரி தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிக்கு உரிய நேரத்தில்  போதிய தண்ணீர் வந்து சேர்வதில்லை. மேலும் காவிரி நீர் பல நேரத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரிநீராக திறந்து விடப்பட்டு பயனற்று கடலில் கலந்து வருகிறது. 

Chess Olympiad 2024:செஸ் ஒலிம்பியாட்..தமிழ்நாட்டிற்கு கிடைத்த கௌரவம்!முதல் சுற்றிலேயே மாஸ் காட்டிய பிரக்ஞானந்தா - வைஷாலி

முப்போகம் விளைந்த பூமியில் தற்போது ஒருபோக சாகுபடிக்கே திட்டம் - கலங்கி நிற்கும் விவசாயிகள்

கடற்கரையை ஒட்டிய பகுதி

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுக்கா ஆகிய இரண்டு தாலுக்காவிலும் விவசாயிகள் பெரும்பாலும் முப்போகம் விளைந்த நிலத்தில் தற்பொழுது ஒருபோகத்தையே நம்பியை தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் போர்வெல் செய்தால் உப்பு நீர் மட்டுமே கிடைக்கும் நிலையில்,  ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்துவரும் நிலையில், காவிரி நீர் போதிய அளவு கிடைக்காததால் தற்போது மழையை மட்டுமே முழுவதுமாக  நம்பி நெல் விவசாயம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?

முப்போகம் விளைந்த பூமியில் தற்போது ஒருபோக சாகுபடிக்கே திட்டம் - கலங்கி நிற்கும் விவசாயிகள்

நேரடி நெல் விதை

மேலும்  அவ்வபோது சிறு மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சம்பா சாகுபடி துவங்கியுள்ளனர். தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர், அனந்தமங்கலம், தில்லையாடி, பிள்ளைபெருமாள்நல்லூர், சீர்காழி தாலுக்காவில் கொள்ளிடம், ஆச்சாள்புரம், குதிரைகுத்தி, மாதானம், தாண்டங்குளம், புதுபட்டினம், நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விதைத்து முளைத்து வளருவதற்கு மழை பொழிய வேண்டி காத்துள்ளனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

முப்போகம் விளைந்த பூமியில் தற்போது ஒருபோக சாகுபடிக்கே திட்டம் - கலங்கி நிற்கும் விவசாயிகள்

சம்பா தொகுப்பு திட்டம் 

இந்நிலையில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட திருக்கடையூர் விவசாயி ராமமூர்த்தி கூறுகையில்; ஒருபோக சாகுபடியில் ஈடுபடும் தங்களுக்கு அரசு சார்பில் அனைத்து மானியங்களும் முறையாக  கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவை தொகுப்பு திட்டம் போன்று சம்பா தொகுப்பு திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும், உழவு மானியம், விதை மானியம், உரம் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தார். மேலும் சம்பா நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுள்ள தங்களுக்கு போதிய மழை வேண்டும், மழை இல்லை என்றால் இந்த ஒருபோகமும் என்ன ஆகுமோ என்ற கவலையில் தான் தற்போது நெல் விதைப்பை தொடங்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget