Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம்?
ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மீண்டும் கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அத்தியாவசிய அட்டையாக இருப்பது ஆதார் அட்டை ஆகும். மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டை வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்க, சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற, வாக்காளர் அடையாள அட்டை என அரசின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு:
ஆதார் கார்டை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாட்டில் இதுவரை பலரும் புதுப்பிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே புதுப்பிக்க கால அவகாசம் இருப்பதாலும் பல இடங்களில் மக்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆதார் காடை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் கார்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் கார்டை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண், புகைப்படங்கள் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை மாற்ற விரும்பினால் அதற்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் ஏற்கனவே கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது அந்த கால அவகாசத்தை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது.
ஆதார் அட்டை:
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இதுவரை புதுப்பிக்கப்படாத நபர்கள் தங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரி சான்றிதழ்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இணையம் மூலமாகவும் அருகில் உள்ள தபால் நிலையத்திலும், இ சேவை மையத்திலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையத்தின் வழியில் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற முடியாது. புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் இ – சேவை மையத்திற்கு நேரில் சென்றுதான் மாற்ற முடியும். மேலும், கருவிழி, கைரேகை பதிவு ஆகிய முக்கிய தகவல்களை நேரில் சென்றுதான் மாற்ற இயலும்.
அப்டேட் செய்வது எப்படி?
- ஆதார் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI உள்ளே செல்ல வேண்டும்.
- உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் ஒரு முறை மட்டுமே உள்ளே செல்லும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
- உங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி. தேவையான அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றவும்.
- உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.