மேலும் அறிய

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி  வரை பரப்புரை நடைபயணம்

தஞ்சாவூர்: காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி  வரை பரப்புரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பரப்புரை நடை பயணம் 24ம் தேதி தொடக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 24 பூம்புகாரில் பரப்புரை நடை பயணம் துவங்கி செப்டம்பர் 29 தஞ்சாவூரில் வந்து நிறைவடைகிறது. பரப்புரை நடை பயண அனுமதிக்காக இன்று மதியம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் தலைமையில் நிர்வாகி சித்ரா ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஓ.சேக் அலாவுதீன், திராவிடர் விடுதலைக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் ஆகியோர் தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து ப கோரிக்கையை அளித்தனர். பின்னர்  மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

விவசாயமே முதன்மைத் தொழில்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமே முதன்மைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மற்றும் உளுந்து, பயறு, பருத்தி உட்பட சாகுபடிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஓஎன்ஜிசி  எண்ணெய் கிணறு தோண்டுதல், மற்றும் மீத்தேன், ஷேல்கேஸ்,  ஹைட்ரோ கார்பன், நிலக்கரி உட்பட விவசாயத்திற்கு எதிரான திட்டங்களால் விவசாயம் அழிந்து,  டெல்டா பகுதி பாலைவனம் ஆகிற சூழ்நிலைகள் வந்தபோது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தோழமை அமைப்புகளுடன் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தி, விவசாயத்துக்கு எதிரான பாதிப்புத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த சென்னையை சேர்ந்த 5 பேர்- முதல்வர் நிவாரண நிதி வழங்கல்

நிலத்தடி நீர்த் தொகுப்பை பாழ்படுத்தும் வேலைகள்

மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் - 2020 நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய எண்ணெய் - எரிவாயுக் கிணறுகளை மராமத்து செய்வதாக கூறிக்கொண்டு, நிலத்தடி நீர்த் தொகுப்பை மேலும் பாழ்படுத்தும் வேலைகள் முயற்சிக்கப்படுகின்றன. விவசாய நிலங்களில் விவசாய மல்லாத தொழிலகங்கள் நிறுவப்படுவதற்குமான சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

காவிரி படுகை மாவட்டங்கள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி படுகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும், வேளாண் மண்டலம் எக்காரணம் கொண்டும் தொழில் மண்டலமாக ஆகக்கூடாது, காவிரி படுகையில் உள்ள        ஏரி,குளம்,பாசன கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும், காவிரி படுகை முழுவதும் நீர் பாசன கட்டமைப்பு,        நீர் மேலாண்மை செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

விளைநிலங்களாகவே தொடர வேண்டும்

விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி பூம்புகாரில் பரப்புரை நடைப்பயணம் துவங்கி மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வழியாக 29ம் தேதி தஞ்சாவூர் வந்து நிறைவடைகிறது. 

மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரப்புரை நடைப்பயணம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget