Chess Olympiad 2024:செஸ் ஒலிம்பியாட்..தமிழ்நாட்டிற்கு கிடைத்த கௌரவம்!முதல் சுற்றிலேயே மாஸ் காட்டிய பிரக்ஞானந்தா - வைஷாலி
செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகரமான துவக்கத்தை பெற்றுத்தந்துள்ளனர்.
45வது செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகரமான துவக்கத்தை பெற்றுத்தந்துள்ளனர்.
45வது செஸ் ஒலிம்பியாட்:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்ற நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் உள்ள புடபெஸ்டில் தொடங்கியுள்ளது. இந்த 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் ரவுண்ட் நேற்று (செப்டம்பர் 11) தொடங்கியது. அந்தவகையில் இந்த தொடர் செப்டம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், புடபெஸ்ட்டின் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் 193 அணிகளும், மகளிர் பிரிவில் 181 அணிகளும் போட்டியிடுகின்றன.
இதில், இந்தியா சார்பில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், விதித் குஜராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்கிறது. அதேபோல, மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது.
முதல் சுற்றிலேயே அசத்திய பிரக்ஞானந்தா:
Think about it - how one family is powering Indian chess! On 11th of September 2024 on the first day of the Chess Olympiad 2024, Gukesh and Harika were rested and so siblings Praggnanandhaa and Vaishali took the first board for the country in open and women's section… pic.twitter.com/cataRn5kWu
— ChessBase India (@ChessbaseIndia) September 12, 2024
ஓபன் பிரிவில் மொராக்கோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி தலா 1 புள்ளி பெற்று மொராகோவை ஒயிட் வாஷ் செய்தனர். பிரக்ஞானந்தா தனது எதிர் அணி வீரர் 47 வயது முகமது திசிரை, 18வது நகர்வில் இருந்தே சாவலை கொடுத்தார்.
கலக்கிய வைஷாலி:
மகளிர் பிரிவில் ஜமைக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தலா ஒரு புள்ளி, வந்திகா அகர்வால் டிரா செய்து 0.5 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர். முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி மொராக்கோவையும், மகளிர் அணி ஜமைக்காவையும் வீழ்த்தி சாதித்திருக்கிறது இந்தியா.
மேலும் படிக்க: IND vs BAN: அதிரப்போகுது தலைநகர்! நாளை சென்னைக்கு வரும் இந்திய கிரிக்கெட் அணி!
மேலும் படிக்க:Rohit Sharma: மும்பை அணியில் ரோகித்தின் இடம் காலி..! வெளியேறுவாரா? டிரேட் செய்யப்படுவாரா? புதிய அணி எது?