மேலும் அறிய

பருவம் தவறி பெய்த மழை - ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மாதம் 30 -ஆம் தேதி தொடங்கி டெல்டா மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய தொடர்மழையின் காரணமாக டெல்டா மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 68 ஆயிரம் ஹெக்டேர் பயிர்களில் சுமார் 20 சதவீத பயிர்கள் அதாவது 14 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளானது. 

பருவம் தவறி பெய்த மழை - ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு

இதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ருபாய் நிவாரணம் அறிவித்தார். இந்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!

பருவம் தவறி பெய்த மழை - ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு

அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெங்களூரு தரக்கட்டுப்பாடு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ் தலைமையிலான மத்திய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள மங்கைநல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

IND vs AUS 1st Test: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டி ; 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை..!

பருவம் தவறி பெய்த மழை - ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு

அப்போது நெல்லின் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் 2002 -ஆம் ஆண்டில் கொள்முதல் செய்தது போன்று தற்போதும் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆய்வின் முடிவில் நெல் மாதிரிகளை முறையிட்டு சீல் வைத்து அதிகாரிகளுக்கு குழுவினர் எடுத்துச் சென்றனர். இந்த நெல் மாதிரியானது இந்திய உணவுக் கழக தர கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஈரப்பதம் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vaathi Trailer: 'எங்க சார் வந்துட்டாரு..' ரிலீசானது வாத்தி ட்ரெயிலர்..! கல்வி அரசியலை பேசுகிறாரா தனுஷ்?

பருவம் தவறி பெய்த மழை - ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு

தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோவில், சீர்காழி தாலுகாவில் வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை தாலுகாவில் ஆனந்ததாண்டவபுரம் மற்றும் மூவலூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட வேளாண் இயக்குனர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget