மேலும் அறிய

ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!

போடியில் ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை உள்ள நிகழ்வுகளை கூறினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஓ பன்னீர்செல்வம் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை உள்ள நிகழ்வுகளை கூறினார். சட்டப் போராட்டங்கள் நடத்தி அதிமுகவின் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறிய ஓபிஎஸ்,  எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதே தன்னுடைய குறிக்கோளாகும் என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!

இரட்டை பதிவு முறையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் கழகப் பொதுச் செயலாளராக எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும் கூறினார். அதிமுக உரிமை மீட்பு குழு என்பது அதிமுகவின் மீண்டும் மீட்டெடுக்க தான் என்பது குறித்துக் கூறினார்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமே வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 11 தேர்தல் களத்தில் தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனம் செய்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தி என்னை தோல்வியடைய செய்தனர். நான் என்ன தவறு செய்தேன். என்னை அரசியலில் இருந்து ஒரு முற்றிலும் ஓரம் கட்ட நினைப்பது ஏன்? இதுவரை கட்சியை மீட்பதற்காக எவ்வளவு போராட்டங்களையும், அவமானத்தையும் சந்தித்து வருகிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், நான் இனி சங்கர மடத்திற்கா செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!

டிடிவி தினகரன் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் மீது மிகுந்த மதிப்பு மரியாதையும் எனக்கு உள்ளது அவர் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார். திமுகவில் இணைவீர்களா? என்பது கேட்டதற்கு வழக்கமாக சட்டமன்றத் தேர்தல் முடிவடையும் பொழுது ஆளும் கட்சி சபாநாயகர் மற்றும் முதல்வரை பார்த்து மரியாதை தெரிவிப்பது நமது மரபாகும். அந்த மரபையே நான் கடைப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.  வேறு எந்த விஷயமும் இல்லை பத்திரிகையாளர் ஆன நீங்கள்தான் பல்வேறு காரணங்களை கூறி பல்வேறு விஷயங்களை பரப்பி வருகிறீர்கள் என்று கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி அழைத்தால் மீண்டும் அதிமுக செல்வீர்களா என்று கேட்டதற்கு, மதியாத தலைவாசல் மிதியாதே என்பதுதான் உண்மை என்று தனது பேட்டியை நிறைவு செய்தார். மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாதுகாத்து வந்த இயக்கத்தை மீட்டு மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக கொண்டு செல்வது எனது குறிக்கோள் என்றும் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!

 வரும் சட்டமன்றத் தேர்தலில் நிர்பீர்களா என்ற கேள்வி எழுப்பியதற்கு நீங்களே கூறுங்கள் என்று பத்திரிகையாளர்கள் பார்த்து கூறினார். மொத்தத்தில் ஒரு மணி நேரம் தனது அரசியல் வரலாறை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ஓ. பன்னீர்செல்வம் இனி வருங்காலத்தில் தனியாக நிற்பாரா?  வேறு கட்சிகளுடன் இணைவாரா? என்று கேள்விக்குறியில் உடனே தனது பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்தார். இன்னும் அவர் தனது நிலைப்பாடு குறித்து முழுமையாக எந்த தகவலும் கூறவில்லை என்பது உண்மை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிமுக 'பாஸ்' - NDA கூட்டணி: OPS அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் - செல்லூர் ராஜு கடுகடு பேச்சு !
அதிமுக 'பாஸ்' - NDA கூட்டணி: OPS அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் - செல்லூர் ராஜு கடுகடு பேச்சு !
மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
Embed widget