மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!

உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட இந்தியாவில் மாட்டின் பெயரில் நடக்கும் அரசியல் பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. மாட்டினை உணவாக உண்ணும் மக்கள் பெருவாரியாக இருக்கும் இந்த நாட்டில், அதை உண்பதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

12 மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் உள்பட சுமார் 80 மில்லியன் இந்தியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், நாட்டின் 20 மாநிலங்களில் மாட்டிறைச்சியை விற்பதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒரு படி மேலே சென்ற உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சியை கட்டுப்படுத்தும் விதமாக இயற்றப்பட்ட மாநில சட்டங்கள் செல்லும் என 2005ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இச்சூழலில், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, மாட்டிறைச்சியை விற்பதாகக் கூறி, இஸ்லாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்தது. இந்து மத கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே மாட்டினை வழங்குவது பழக்கம் மாறியுள்ளது.

நிலைமை இப்படியிருக்க, உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா கலாசாரத்திலும் கிராமப்புற பொருளாதாரத்தில் மாடு வகிக்கும் முக்கிய பங்கினை மேற்கோள் காட்டும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பசு அணைப்பு தினத்தை அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
 
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது" 

இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், "மாடு அணைப்பு தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள குறிக்கோள், பசுக்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே ஆகும். 

பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்" என்றார்.

காதலர் தினமே மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் எனக் கூறி அதற்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
BJP: மிஷன் தமிழ்நாடு, மேற்குவங்கம் - இலக்கை அடையுமா பாஜக? திமுக கைவசமுள்ள அஸ்திரங்கள், SIR ஆபத்தா?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
HDFC Insurance: தொழில் வாழ்க்கை தொடக்கத்தில் காப்பீடு ஏன் அவசியம்?  எதை வாங்கலாம், எதை தவிர்க்கலாம்?
TN Roundup: ஸ்டாலின் வார்னிங், விஜய் மீது உதயநிதி அட்டாக், சரிந்த தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் வார்னிங், விஜய் மீது உதயநிதி அட்டாக், சரிந்த தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Maithili Thakur: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட்.. ஒரே மாதத்தில் MLA.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட மைதிலி தாகூர்!
Maithili Thakur: கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட்.. ஒரே மாதத்தில் MLA.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட மைதிலி தாகூர்!
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி
Toyota Discount: ஆத்தி.. ரூ.13 லட்சம் தள்ளுபடி - டாப் 3 லக்சரி ப்ரீமியம் கார்களுக்கு அதிரடி சலுகை - டொயோட்டா அறிவிப்பு
Toyota Discount: ஆத்தி.. ரூ.13 லட்சம் தள்ளுபடி - டாப் 3 லக்சரி ப்ரீமியம் கார்களுக்கு அதிரடி சலுகை - டொயோட்டா அறிவிப்பு
Embed widget