மேலும் அறிய

Farmers Scheme: ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு

Farmers Scheme: விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இ-வாடகை 2.0 ஆன்லைன் கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரொம்ப ரொம்ப கம்மியான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வாங்க வாய்ப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கான கடன் உதவி திட்டங்கள், இயற்கை பேரிடரின் போது இழப்பீடு, மானிய உதவி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் எளிதில் வாடகைக்கு பெற்று பயன் பெறும் வகையில் "இ வாடகை-2.0" என்ற மேம்படுத்தப்பட்ட இ-வாடகை ஆன்லைன் கைபேசி செயலி ரூ.37.88 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்கான நடைமுறைகளை விவசாயிகள் எளிமைப்படுத்தி, வாடகைக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் ஆகியவற்றை இச்செயலி முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம், உழவர் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படுவதால்,விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை தேவையான நேரத்தில் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலும். மேலும், இந்த செயலி விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் அல்லது தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கிடையேயான நேரடி தொடர்பை ஏற்படுத்தி, இடைத்தரகர்களின் தேவையின்றி சேவைகள் வழங்கப்படுவதால், இதன் காரணமாக கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகின்றன. 

அதே நேரத்தில், சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக உழவு, விதைப்பு, அறுவடை போன்ற முக்கிய காலகட்டங்களில் வேளாண் இயந்திரங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம், விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உதவுகிறது. இ வாடகை-2.0  செயலியில், விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை துறையானது. கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் அல்லது தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படும். இச்செயலியில் இதுவரை, 892 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 5952 தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களும், செயலியில், வேளாண்மைப் பொறியியல் ஆக மொத்தம் 6844 சேவை வழங்குநர்கள். இயந்திரங்களையும் 9359 வேளாண் 6780 கருவிகளையும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக பதிவு செய்துள்ளனர்.

விவசாயப் பெருமக்கள் தங்களுக்கு தேவைப்படுகின்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர். நெல் நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், ட்ரோன்கள் போன்றவற்றினை இச்செயலி மூலம் எளிதாக வாடகைக்கு பெற்று பயன்பெறுமாறு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர்  எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
TNSTC Special Buses: சொந்த ஊருக்கு பயணிக்க தயாரா? வார இறுதி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முன்பதிவு செய்வது எப்படி?
TNSTC Special Buses: சொந்த ஊருக்கு பயணிக்க தயாரா? வார இறுதி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முன்பதிவு செய்வது எப்படி?
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
Embed widget