Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அகலாத நிலையில், பள்ளி மாணவிகள் பக்தி பரவசமடைந்து சாமியாடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.. மேலும் சில மாணவிகள் சாமி ஆடி கீழே மயங்கி விழுந்ததால், அதிகாரிகளுடன் வாக்குவாதம் நட்ந்தது சர்ச்சை எழுந்துள்ளது..
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தொடக்க விழா நிகழ்வாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அங்க இடி முழங்குது என கருப்புசாமியின் பக்தி பாடல் ஒலிக்க தொடங்கி, கலைஞர்கள் ஆட தொடங்கினர்.. இதனை கண்டு மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள், வித்யாசமாக முக பாவனைகளை வெளிபடுத்த தொடங்கினர். பின்னர் பக்தி பாடல்களை கேட்டு தாங்களும் பக்தி பரவசமடைந்து, சாமியாட தொடங்கினர். இதனால் அங்கே இருந்த மற்ற மாணவிகள், சாமியாடும் மாணவியை அனைத்துகொண்டனர்.
மேலும் சில மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்த போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிக்க தண்ணீர் வழங்கி இருக்கையில் அமர வைத்தனர்
இந்நிலையில் அரசு நிகழ்ச்சியில் இது போன்ற பக்தி பாடல் பாடப்பட்டது ஏன் என்று கேள்விகேட்டு அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதம் செய்தனர்
இதனால் கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு அனைவரும் புறப்பட்டனர், இந்நிலையில் அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடல் ஒலிக்கப்பட்டு, மாணவிகள் மயங்கி விழுந்த விவகாரம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.