TVK Maanadu : "ஆண்டவா மழை வரக்கூடாது.. மாநாடு நல்லபடியா நடக்கணும்” யாகம் நடத்திய தவெகவினர்
மழை வேண்டும் என்று யாகம் நடத்திய பொதுமக்களை பார்த்திருக்கிறோம் ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நல்லப்படியாக நடைப்பெற வேண்டும் என கிராம மக்கள் மழையே பெய்யக் கூடாது என யாகம் நடத்தியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மாநாட்டின் முகப்பு பகுதியில் கோட்டையின் சுற்றுப்புற சுவர் போன்ற வடிவமும் தொண்டர்களை வரவேற்க நுழைவு வாயிலில்பிளிரும் யானைகள் இரண்டு துதிகையை தூக்கி வரவேற்கும் விதமாக டிஜிட்டல் பேனர் வைத்து அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய உள்ளதால் மாநாடு நடைபெறும் 27 ஆம் தேதியும் அதற்கு முந்தைய மூன்று நாட்கள் மழையே பெய்யக் கூடாது என வி சாலை கிராம மக்கள் அந்த ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனாரப்பன் கோயிலில் மழை வரக்கூடாது என யாகம் வளர்த்தி கடவுளிடம் வேண்டுகோள் விடுத்தனர்
தமிழக முழுவதும் மட்டுமல்லாமல் பல்வெறு மாநிலங்களில் இருந்தும் நடிகர் விஜயின் ரசிகர்கள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வருவார்கள். அவர்கள் அனைவரும் மாநாட்டை முடித்து விட்டு நல்லபடியாக அவர்களுடைய ஊருக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலையும் முன்வைத்த வி.சாலை கிராம மக்கள், மூன்று நாட்களுக்கு மழையே பெய்யக்கூடாது எனவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எங்கள் கோரிக்கையை ஐயனாரப்பன் நிறைவேற்றுவார் என அந்த ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் 3 நாட்களுக்கு மழையே பெய்யக்கூடாது என வி.சாலை கிராம மக்கள் யாகம் நடத்திய சம்பவம் பொருளாகியுள்ளது