மேலும் அறிய

உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு

தங்கம் விலை  உயர்வுக்கு பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளது என்கின்றனர் விபரமறிந்த வட்டாரத்தினர்.

தஞ்சாவூர்: தங்கம் விலை ராக்கெட் ஏறி விண்ணுக்கு சென்று கொண்டு இருக்கிறது. இதனால் நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது கனவாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தங்கம் வாங்க ஆதார் கார்டு, பான் கார்டு அவசியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி விலை உயர்வுக்கு கிடுக்கிப்பிடி போட மத்திய அரசு தயாராகி வருகிறதாம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை MCX சந்தையில் சுமார் ரூ. 1.6 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல, வெள்ளி விலை ரூ. 3.5 லட்சத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தங்கம் விலை  உயர்வுக்கு பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளது என்கின்றனர் விபரமறிந்த வட்டாரத்தினர். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, ஊழல் அரசியல்வாதிகள் தங்கத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் வாங்குவது போன்ற காரணங்கள் பிரதானமாக உள்ளதாக நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். 

உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு

நிலமோ, இடமோ, வீடுகளோ, சொத்துக்களோ என்றால் தெரிந்து விடும் என்பதால் ஊழல்வாதிகள் தங்கள் பணத்திற்கு தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர். இது நடுத்தர குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு கூட தங்கம் குண்டுமணி அளவிற்கு கூட வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.

தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், பவுனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.

ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், பவுனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் தங்கம் அரசியல் அரங்கில் பெரும் பாதிப்பை பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று மத்திய அரசு நினைக்கிறதாம். குறிப்பாக ஊழல்வாதிகள் வாங்கி குவிக்கும் தங்கத்தால்தான் இவ்வாறு விலை உயர்கிறது. கணக்கில்லாமல் தங்கம் பதுக்கப்படுகிறது என்றும் மத்திய அரசுக்கு தகவல்கள் பறந்துள்ளன. 

இதையடுத்து தங்கத்தின் விலைக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் மத்திய அரசு அதிரடியாக களம் இறங்க உள்ளதாம். அதற்காக இனி குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கம் வாங்க ஆதார் மற்றும் பான் கார்டு அவசியம் என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளதாம். இதை அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை நிறுவனங்களும் மேற்கொண்டே ஆகவேண்டும். இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் மத்திய அரசு களம் இறங்க உள்ளதாம். குறிப்பிட்ட அளவு சவரனுக்கு மேல் யார்யார் தங்கம் வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் ஊழல்வாதிகள் சிக்கிக் கொள்வார்கள் என்று மத்திய அரசு நினைப்பதாக கூறப்படுகிறது. அரசியல் அரங்கில் தங்கத்தின் விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக இந்த கிடுக்கிப்பிடியை போட மத்திய அரசு தயாராகி வருகிறதாம். இந்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து தங்க விற்பனை நிறுவனங்களையும் அழைத்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. 

தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது. தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3½ லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் தங்கம், வெள்ளி விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகியுள்ளது என்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Embed widget