மேலும் அறிய

DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..

DMK alliance: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையவுள்ளது. இதன் படி தற்போது வரை தேர்தல் பணியில் முதல் ஆளாக களத்தில் உள்ளது அதிமுக, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்திய அதிமுக, பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளை கூட்டணியில் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி நாளை தொகுதி எண்ணிக்கை தொடர்பாக கையெழுத்தாகவுள்ளது. 

அதிமுகவில் தொகுதி பங்கீடு

அந்த வகையில் பாஜக 40 முதல் 45 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்கிறது. இதில் பாஜகவிற்கு 20 முதல் 25 தொகுதிகளும், உள் ஒதுக்கீடாக அமமுகவிற்கு 8 முதல் 10 தொகுதிகளும், ஐஜேகே, புதிய நீதிக்கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், தமாகாவிற்கு 4 முதல் 5 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் உள்ள  பாமகவிற்கு 18 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் திமுகவில் தொகுதி பங்கீடு

இதே போல திமுகவும் குறைந்தது 165 முதல் 170 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 173, காங்கிரஸ் 25, விடுதலை சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, மதிமுகவிற்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவைக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

எனவே இந்த முறை திமுக கூட்டணியில் புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. மேலும் புதிதாக எஸ்டிபிஐயும் திமுக கூட்டணியில் இணைய காய் நகர்த்தி வருகிறது. மேலும் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் திமுக கூட்டணியில் இணைவார் என கூறப்படுகிறது. இதே போல மதில் மேல் பூனையாக தேமுதிக உள்ளது. அதிமுக- திமுக என இரு தரப்பிலும் பிரேமலதா பேசிவருகிறார். எனவே எந்த கூட்டணியில் இணைவார் என்பது  கேள்விக்குறியாக உள்ளது..

திமுகவில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.?

இந்த நிலையில் திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுக -165 முதல் 170, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை எதிர்பார்க்கிறது. ஆனால் கூடுதல் கட்சிகள் திமுகவிற்கு வந்துள்ளதால் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் அல்லது கூடுதலாக 1 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள், மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. 

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே மக்கள் நீதி மய்யத்திற்கு இந்த முறை 2 முதல் 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி மற்றும் எஸ்டிபிஐக்கு தலா 2 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் 3 முதல் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் தனியரசு, கருணாஸ், தமிம்முன் அன்சாரியும் திமுக கூட்டணியில் தொகுதி கேட்டு வருகிறார்கள்.

உத்தேச பட்டியல்

திமுக -165
காங்கிரஸ்- 25
இ.கம்யு- 6
ம.கம்யூ- 6
விடுதலை சிறுத்தைகள்- 6
மதிமுக- 6
மக்கள் நீதி மய்யம்- 3
மனித நேய மக்கள் கட்சி- 2
முஸ்லிம் லீக்- 3
எஸ்டிபிஐ- 2
வேல்முருகன்-1 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. இதில்  ராமதாஸ் தலைமையிலான பாமக வந்தால் 3 தொகுதிகளும், தேமுதிக வரும்பட்சத்தில் 6 தொகுதிகளும் ஒதுக்க வாய்ப்புள்ளது. இதில் தேமுதிக வரவில்லையென்றால் திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Embed widget