மேலும் அறிய

பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

பாதியில் வெளியேறியது ஏன்?

”பேசவிடாம மைக் OFF பண்றாங்க”

ஆளுநர் பரபரப்பு அறிக்கை


சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாமல் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், ஆளுநர் ரவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை நடைபெற இருந்த நிலையில், அரசு தயாரித்த உரையை வாசிக்க ஆளுநர் மறுத்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு உரையில் பல ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பொதுமக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்ததாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது என்றும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருகையில் தமிழ்நாடு  4ஆம் இடத்திலிருந்து தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 55 சதவீதம் உயர்வு, பெண்கள் மீது பாலியல் தாக்குதல் 33 சதவீதம் அதிகரிப்பு, போதைப்பொருள் பழக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டது போன்ற கடுமையான சமூக பிரச்சினைகள் தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள், கல்வித் துறையின் வீழ்ச்சி, காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள், கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படாததால் மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழந்துள்ள நிலை தொடர்பாகவும் அந்த உரையில் இடம்பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறங்காவலர் குழுக்கள் இல்லாத ஆயிரக்கணக்கான கோவில்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாமல் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், இதனால் உரையாற்ற முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

 

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
விவசாயிகளின் இந்த நிலைக்கு தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடே காரணம் - கொந்தளித்த தினகரன்
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தைக் காட்டுமா தவெக? கட்டம் கட்டத் தயாரான திமுக, அதிமுக! களத்தில் கால்பதிப்பது யார்?
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget