மேலும் அறிய

Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்

தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மேலும் 1,320 ரூபாய் உயர்ந்து, பொதுமக்களை கதறடித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் உச்சம் தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்த நிலையில், பிற்பகலில் மேலும் 1,320 ரூபாய் விலை உயர்ந்து மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இதன் மூலம், தங்கத்தின் விலை கிராம் 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதேபோல், காலையில் விலை உயராத நிலையில், பிற்பகலில் வெள்ளியின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

ரூ.1,15,000-த்தை கடந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி, விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,290 என்ற உச்ச விலையையும், ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்ச விலையாக, 1,06,320 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 16-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,05,840 ருபாய்க்கும் விற்கப்பட்டது.

பின்னர், வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 17-ம் தேதி மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்று, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 18-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 19-ம் தேதி மேலும் அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 13,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,07,600 ரூபாயாகவும் எகிறிது.

இந்த சூழலில், 20-ம் தேதியான நேற்று ஒரே நாளில், தங்கத்தின் வலை 3,600 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சி அளித்தது. காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 13,610 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்நிலையில், மாலையில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 290 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று மட்டும் சவரனுக்கு 4,120 ரூபாய் உயர்வு

இந்த சூழலில், இன்று காலையிலேயே சவரனுக்கு மேலும் 2,800 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 350 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்தை கடந்து, 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை. அதன்படி, கிராமிற்கு மேலும் 165 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,415 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,15,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிற்பகலில் விலை உயர்ந்த வெள்ளி

இதேபோல், இன்று காலை விலை ஏற்றம் இல்லாமல் இருந்த வெள்ளி, பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்ற வாரத்தின் இறுதியில் கிராம் 310 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, இந்த வாரத்தில் தொடக்க நாளில், அதாவது 19-ம் தேதி 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வெள்ளியின் விலை 20-ம் தேதியான நேற்று காலையில் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், மாலையில் கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், இன்று பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 345 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 4,120 ரூபாய் விலை உயர்ந்து, பொதுமக்கள் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளது.

 

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget