மேலும் அறிய

"அப்பா என்ன காப்பாத்துப்பா’’இறக்கும் முன் கதறிய மகள்தேம்பி அழுத தந்தைYOUTUBE விபரீதம்

GLIMPSE FATHER BYTE [வயிறுவலிக்குதுபா, ரத்தமா வருதுபா, என்னைய விட்ராதப்பா, காப்பாத்துப்பா என தந்தையை கட்டிபிடித்து கதறி அழுத மாணவி]

மதுரையில் யூடியுப்பை பார்த்து உடல் பருமனை குறைப்பதற்காக வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொத்தனார் வேலை பார்த்துவரும் வேல்முருகனின் இளைய மகள் கலையரசி தனியார்(லேடிடோக்) கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் கலையரசி சிறிதளவு உடல்பருமனாக இருந்துள்ளார். இதனால் அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் கூறிவந்துள்ளார். அப்போது பெற்றோரும் உடல்பருமன் தானாகவே குறைந்துவிடும் என கூறிவந்துள்ளனர்.

இதனிடையே கடந்த வாரம் கல்லூரி மாணவி YOUTUBE பக்கத்தில்  உடல் எடை குறையாதவர்களுக்கு Fat கரைய வைத்து உடலை மெலிவிக்கும் வெங்காரம் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார். 
இதையடுத்து கடந்த 16ஆம் தேதியன்று மதுரை கீழமாசி வீதியில் தேர்முட்டி அருகில் நாட்டு மருந்து கடையில் வெங்காரம் என்ற நாட்டு மருந்து பொருளை வீட்டிற்கு வாங்கிவந்துள்ளார்.இதையடுத்து சனிக்கிழமை அன்று காலை யூடியுப்பில் கூறியதுபோல வெங்காரத்தை  சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  கலையரசியை அவரது தாயார் விஜயலெட்சுமி மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனைக்குச் அழைத்துசென்று சிகிச்சையளித்துள்ளனர்.

பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மாலை மீண்டும் வாந்தி வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறுவலிப்பதாகவும் வயிற்றுபோக்கில் ரத்தம்வெளியேறிவருவதாகவும் கூறி  தனது தந்தையை கட்டிபிடித்து அழுதுள்ளார். 

ஆனாலும் மீண்டும் கலையரசிக்கு இரவு 11 மணியளவில் அதிகளவிற்கு வாந்தி அதீத வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கலையரசியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும்வழியிலயே உயிரிழந்தாக விட்டதாக கூறியதால் பெற்றோர் கதறி அழுதனர். 

பின்னர் கலையரசியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் தந்தை சமூகவலைதளங்களை பார்த்து மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுக்க வேண்டாம், எனது மகளை போன்று யாரையும் இழந்துவிடக்கூடாது என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்

செய்திகள் வீடியோக்கள்

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?
Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?
மார்பிங் புகார்: பாஜக முருகானந்தம் முன்ஜாமீன் மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மார்பிங் புகார்: பாஜக முருகானந்தம் முன்ஜாமீன் மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆதிதிராவிடர் மாணவர் நிதி மோசடி செய்பவர்கள் தெருவில் 'பிச்சை எடுக்கலாம்' - நீதிபதிகள் கடும் காட்டம்!
ஆதிதிராவிடர் மாணவர் நிதி மோசடி செய்பவர்கள் தெருவில் 'பிச்சை எடுக்கலாம்' - நீதிபதிகள் கடும் காட்டம்!
By Elections: எனக்கு அப்பவே தெரியும்! இடைத்தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும்! தவெகவை விளாசிய இபிஎஸ்..
By Elections: எனக்கு அப்பவே தெரியும்! இடைத்தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும்! தவெகவை விளாசிய இபிஎஸ்..

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Embed widget