திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், பிரதமர் மற்றும் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரியவராகவும் பார்க்கப்படும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடிகள் எங்கும் காணப்படாதது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் அலங்காரப் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் சூழலில், விழாத் திடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக, பாமக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் மட்டுமே நடப்பட்டுள்ளன.
குறிப்பாக, இக்கூட்டத்திற்கான பந்தல் கால் நடும் பூமி பூஜை நடைபெற்ற போது கூட, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு முறையான தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தமாகா தரப்பில் 12 தொகுதிகள் வரை கேட்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது களத்தில் அக்கட்சி புறக்கணிக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாமக கூட்டணியில் இணைந்த நிலையில், ஆரம்பம் முதலே கூட்டணியில் உறுதியாக இருக்கும் தமாகாவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அக்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த புறக்கணிப்பு நடவடிக்கை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் நிலவும் இந்த உட்கட்சி சலசலப்பு, தேர்தல் களப்பணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், புதியதாக மற்றொரு பிரச்சனையால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.





















