மேலும் அறிய

ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் "தபால்" என்பதை குறிக்கும் பெயர் கொண்ட தொலைக்காட்சியை வாங்க தவெக சார்பில் பேரம் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக என அரைநூற்றாண்டுகளைக் கடந்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. 

நெருங்கும் தேர்தல்:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதி முதலே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், கரூர் சம்பவம் தவெக-வை மிக கடுமையாக பாதித்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஜனநாயகன் சிக்கலில் சிக்கி அமைதியாகவே உள்ளார். 

தொலைக்காட்சி தொடங்கும் தவெக:

ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சிகள் வைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தங்களுக்கு சாதகமாக செயல்பட தொலைக்காட்சியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க விஜய் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. "தபால்" பெயர் கொண்ட இந்த தொலைக்காட்சி, கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவர்களும் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

கட்டுப்படியாகாத விலை:

ஆனால், அந்த நிறுவனம் கூறிய விலை தவெக எதிர்பார்த்த தொகையை காட்டிலும் அதிகளவு இருப்பதால் அந்த தொலைக்காட்சியை வாங்குவதில் இழுபறியாக உள்ளது. மேலும்,  மற்றொரு தொலைக்காட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அந்த தொலைக்காட்சியை கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

விரைவில் அறிவிப்பு:

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், அக்கட்சியின் நிர்வாகிகளும் முக்கிய விவகாரங்களில் வாயைத் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். 

தங்களுக்கு சாதகமாக ஒரு தொலைக்காட்சி செயல்பட்டால் அது தவெக-வின் குரலாக ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தொலைக்காட்சியின் விலை தவெக எதிர்பார்த்த தொகைக்கு வந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்:

தற்போது வரை விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆதரவாக எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல, திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் தொடர் மோதல் வெடித்து வருகிறது. ஆனால், தங்களுக்கு என்று அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி இருந்தால் சாமானிய மக்களைச் சென்றடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த தொலைக்காட்சியை விரைவில் தொடங்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
Duraimurugan Hospitalized | ”துரைமுருகனுக்கு என்ன ஆச்சு”ஓடோடி சென்ற ஸ்டாலின் அப்பலோ பரபரப்பு அறிக்கை
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
TVK Vijay Condemn: ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
ஏன் அடிக்குறீங்கன்னு தெரிஞ்சுடுச்சுமா.!; தவெகவினர் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்; பதிவு என்ன.?
H-1B to be Banned.?: யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
யாருப்பா நீ.! H-1B-க்கு தடை விதிக்க மசோதா; இந்தியர்களை கதறவிடும் அமெரிக்க செனட் உறுப்பினர்
Embed widget