மேலும் அறிய

”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?

ஓசூரில் திமுக அரசு கொண்டுவரத் திட்டமிட்ட சர்வதேச விமான நிலையத்தை சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் துணையோடு தனது மாநிலத்துக்கு தட்டித் தூக்கிவிட்டார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென்னிந்தியாவில் பெருநிறுவனங்களின் முதலீடுகள் பாஜக-வின் கூட்டணி கட்சி ஆளும் ஆந்திராவுக்கு சென்றுவரும் நிலையில் தற்போது ஓசூர் அமையவிருந்த விமான நிலையமும் ஆந்திராவுக்குச் சென்றிருக்கிறது.

கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காக ஆந்த ஆண்டின் இறுதியில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கச் சாத்தியமான இடங்களைத் தேர்வு செய்ய ஆலோசகர்களையும் அழைத்துப் பேசியது. அதன்பின்னர், கடந்த 2024 ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின், ``ஓசூரில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் பயன்பெறும் வகையில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்" என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழிற்துறை நகரங்களில் ஒன்றாக அறியப்படும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் வந்தால் ஏற்றுமதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியாமானதாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால், ஒசூரிலிருந்து 75 கி.மீ தூரத்தில்தான் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இருப்பதால் இதற்கு சிக்கல் வந்தது. அதவாது, 2008-ல் கெம்பேகவுடா விமான நிலையம் அமைக்கப்பட்டபோது, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. 2033 வரை கெம்பேகவுடா விமான நிலையத்தைச் சுற்றி 150 கி.மீ தொலைவில் எந்தப் புதிய விமான நிலையமும் அமைக்கக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இதனால், தமிழக அரசு விமான நிலையம் கட்ட மத்திய அரசிடம் முதலில் அனுமதி பெற்று, 2033-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டது. அதன்படி தமிழக அரசு ஓசூரில் வான்வெளி அனுமதி கோரி மத்திய பாதுகாப்புத்துறையிடம் விண்ணப்பித்தது. ஆனால் மத்திய அரசோ, ``ஓசூர் வான்வெளி பகுதியில்தான் இந்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்படுகின்றன. எனவே விமான நிலையத்துக்கு இங்கு அனுமதியளித்தால் பாதுகாப்பு சிக்கல் வரக்கூடும்" என்று அனுமதி மறுத்தது.

இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக-வின் துணையோடு தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். மத்தியில் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக-வுக்கு தெலுங்கு தேசம் கட்சி கைகொடுத்ததால் அக்கட்சிக்கு மோடி அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. குறிப்பாக 36 வயதேயான தெலுங்கு தேசம் எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தில் விமான நிலைய உட்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய உயர்மட்ட கூட்டம் நடத்தினார். இதில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலைய ஆணைய மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில்,குப்பம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருக்கிறது. இதற்கென்று 1250 ஏக்கர் நிலையம் கண்டறியப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணிகள் 2027-ல் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, ஓசூருக்கு வரவேண்டிய விமான நிலையத்துக்கு பாஜக அரசு வேண்டுமென்றே அனுமதி மறுத்து, தனது கூட்டணி கட்சி ஆளும் ஆந்திராவுக்கு மாற்றியிருக்கிறது. இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்க அம்மாநிலங்களை வேண்டுமென்றே பாஜக அரசு புறக்கணிக்கிறது என்று  குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்
கிருஷ்ணர், ராதை வேடத்தில் கலக்கிய பிள்ளையார்பட்டி பள்ளிக் குழந்தைகள்
விழுப்புரத்தில் பதறவைக்கும் சம்பவம்! திடீரென சரிந்த மண்... குழிக்குள் புதைந்த தொழிலாளியைச் சுற்றி வளைத்து மீட்ட தீயணைப்பு படை!
விழுப்புரத்தில் பதறவைக்கும் சம்பவம்! திடீரென சரிந்த மண்... குழிக்குள் புதைந்த தொழிலாளியைச் சுற்றி வளைத்து மீட்ட தீயணைப்பு படை!
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்! இந்தியாவில் 2-வது இடம் பிடித்து புதிய சாதனை!
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்! 2-வது இடம் பிடித்து புதிய சாதனை!
விவசாயிகள் குறைகளுக்கு விரைந்து தீர்வு: விழுப்புரம் ஆட்சியர் கெடு!
விவசாயிகள் குறைகளுக்கு விரைந்து தீர்வு: விழுப்புரம் ஆட்சியர் கெடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
Mitsubishi Pajero India Launch: மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
JSW New Plug-in Hybrid SUV: ஆத்தாடி ஆத்தா.! 1000 கிமீ ரேஞ்சுடன் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV; JSW அதிரடி பிளான்.! அம்சங்கள் என்ன.?
ஆத்தாடி ஆத்தா.! 1000 கிமீ ரேஞ்சுடன் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் SUV; JSW அதிரடி பிளான்.! அம்சங்கள் என்ன.?
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
Embed widget