Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha Arrest: கேரள பேருந்து பாலியல் புகார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேரளாவில் பேருந்து பயணத்தில் தன்னை பாலியல் ரீதியாக தன்னை அணுகியதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபரான தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
மருத்துவப் பரிசோதனை
தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், ஷிம்ஜிதா தேடப்பட்டு வந்தார். தொடர்ந்து வடகரை பகுதியில் உறவினரின் வீட்டில் தங்கி இருந்த அவரை, போலீஸார் கைது செய்துள்ளனர். கொயிலாண்டி வட்டாட்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்.
தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்று கேரள ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
நடந்தது என்ன?
அண்மையில் கேரள மாநிலம், கோழிக்கோடு வடகரைப் பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா. அதே கோழிக்கோடு, கோவிந்தபுரம் பகுதியைத் சேர்ந்த தீபக் (41) என்பவர் கடந்த 15 ஆம் தேதி திருச்சூர் பையனூர் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா, தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் கூட்ட நெரிசலில் நின்றிருந்த அந்த பெண்ணின் மீது தீபக் முட்டி லேசாக உரசியது போலிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் தீபகை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நறு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்கொலைக்குத் தூண்டினாரா?
இதைத் தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், ஷிம்ஜிதாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து வடகரை பகுதியில் உறவினரின் வீட்டில் தங்கி இருந்த அவரை, போலீஸார் இன்று (ஜன. 21) கைது செய்துள்ளனர். கொயிலாண்டி வட்டாட்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






















