Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தயாரிப்பாளர் இடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த யுடியூபர் சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை ஆனார்
சென்னை ஆதம்பாக்கத்தில் சவுக்கு மீடியா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய குழுவினர் தயாரிப்பாளர் ஒருவரை அடித்து பணம் பறித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த மாதம் சம்மன் கொடுக்கப்பட்டும் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காதலால் ஆதம்பாக்கம் போலீஸார் மற்றும் உதவி ஆணையர் குழு பல்லாவரத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்கு சென்று கைது செய்ய முயற்சி செய்தனர் ஆனால் சவுக்க்கு வீட்டின் கதவை திறக்கமால் உள்ளே இருந்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, காவல் துறையினர் மாற்று வழியைத் தேடி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவைப் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைது செய்து அவரை போலீசார் அவசர அவசரமாக கடந்த 13-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், தனக்கு இதயநோய், நீரிழிவு நோய் இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து இருந்தார். இவரது மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கு நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். மேலும் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார் மேலும் எதிர்க்கருத்து தெரிவித்தாலே ஒருவரை கைது செய்வது அரசியலைமைப்புக்கு எதிரானது என்றும் தமிழக அரசு மீது காட்டமாக கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலையானார். அவரது ஆதரவாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.





















