மேலும் அறிய

Pa. Ranjith: தொடரும் சாதிய வன்கொடுமைகள்: காவல்துறையின் அலட்சியம்- பா.ரஞ்சித் கடும் சாடல்!

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன என பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்

தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவது குறித்து அரசை இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்,

பா.ரஞ்சித் சாடல்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். 

மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.

பாதுகாப்பை உறுதி செய்க 

ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது. 

“அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது”  என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.  

இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும் என பா.ரஞ்சித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget