மேலும் அறிய

Kancheepuram Mayor Issue : ”திமுகவுடன் இணைந்த அதிமுக” தர்ணா செய்த கவுன்சிலர்கள்! அலறி ஓடிய மேயர்!

சில நாட்களாகவே மாவட்ட அளவில் திமுகவில் உட்கட்சி பூசல்கள் வெடித்து வரும் நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் மேயரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து சொந்த கட்சி கவுன்சிலர்களே அவமதித்து வெளிநடப்பு செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரம் மேயராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை சார்பில் அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் தற்போது 8 மாதங்கள் கழித்து மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டமானது இன்று நடைபெற்றது. கூட்டம் நடத்த வேண்டும் என்றால் ,  17 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில்,  மேயர் மகாலட்சுமி உட்பட 18 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 

இதனைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக கவுன்சிலர் குட்டி என்கின்ற சண்முகசுந்தரம்  மேயருக்கு பெரும்பான்மை இல்லாததால், ஒவ்வொரு தீர்மானம்  மீது தனித்தனியாக வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  இதனைத் தொடர்ந்து அவருடன் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் , அதிமுக  மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ அதிமுக மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மேயர் முன்பு அமர்ந்து , பெரும்பான்மை இல்லாத மேயர் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மறுபுறம் காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது மண்டல தலைவர் சந்துரு பெண் கவுன்சிலரை ஒருமையில்,  பேசியதாக கண்டித்து பெண் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபுறம் 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் என்னிடம் இருக்கிறது எனவே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக கூறி அங்கிருந்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் வேகமாக புறப்பட்டார். மறுபுறம் துணை மேயர் குமரகுருநாதன் அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தொடர்ந்து, கூட்ட அரங்கிலேயே காத்திருப்பதால் பரபரப்பு நீடித்தது.

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, கூட்டம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த 17 இல் கவுன்சிலர்களில், மூன்று கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் என்பது மேயர் எதிர் தரப்பு கவுன்சிலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையெழுத்து போட்டுவிட்டு மூன்று கவுன்சிலர்களும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி திமுக நிர்வாகிகள்குள் உட்கட்சி பூசல் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், அந்த தேர்தல் தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget