மேலும் அறிய

EVKS Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?

காங்கிரஸை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என தனது அதிரடி பேச்சுகளால் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவையே அலறவிட்ட பெரியார் வீட்டு பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். 

சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படும் சம்பத்- ஈ. வெ. கி. சுலோசனா தம்பதிக்கு 1948ல் ஈரோட்டில் மகனாக பிறந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவர் தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன். பி.ஏ.பொருளாதாரம் படித்த இளங்கோவன், இளம் வயதில் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 

பின்னர் அரசியல் களத்தில் புகழ்பெற்றிருந்த தனது தந்தை சம்பத்தின் மரணத்திற்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கியது. சம்பத்தின் மகன், பெரியாரின் பேரன் என்பதே அவரது அடையாளமாக மாறியது. சிவாஜி கணேசனை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட இளங்கோவன் 1977ல் இருந்து அவருடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தார். 

ஆனால் தேர்தல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தது 1984ல். இந்திரா காந்தியின் மரணம், அப்போதைய காங்கிரஸ்- எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் பலமான வெற்றியை கொடுத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சத்யமங்கலம் தொகுதியில் முதல்முறையாக போட்டி போட்ட இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். 

எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பிறகு ஜானகி தலைமையிலான அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க மறுத்தார் கூட்டணியில் இருந்த பிரதமர் ராஜிவ் காந்தி. ஒருங்கிணைந்த அதிமுக இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. இதனால் கோபத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்.

சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய பிறகு 1989 சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சி சார்பாக ஈரோடு பவானி தொகுதியில் இறங்கி படுதோல்வியடைந்தார் இளங்கோவன். தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி, கட்சியை கலைத்துவிடும் முடிவை எடுத்த போது, தனது அரசியல் பயணம் ஆரம்பமான காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 

கட்சியில் ஆக்டிவ்வாக இருந்த இளங்கோவனுக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட தலைவர், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகள் அடுத்தடுத்து தேடி வந்தன. 2014 முதல் 2017 வரை மாநிலத் தலைவராக இருந்தார். 

காங்கிரஸை எதிர்ப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் இளங்கோவனிடம் இருந்து தப்பிக்க முடியாது. முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்து ஆக்டிவ்வான அரசியல் செய்தவர் என்றால் இளங்கோவன் தான். 

அவரது அதிரடியான பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடியுடன் சேர்த்து அவதூறாக பேசியதற்கு தமிழக அரசியல் களத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தரக்குறைவான விமர்சனங்களால அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்தார். 1989ல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பிறகு தேசிய அரசியல் பக்கம் திரும்பி மக்களவை தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டார். 5 மக்களவை தேர்தல்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 

அதுவும் 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை வசமாக்கியது. அந்த தேர்தலில் தேனியில் போட்டியிட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான். ஜெயலலிதா மீதான மோசமான விமர்சனமே தேனி தொகுதியில் அவரது தோல்விக்கான காரணமாக பேசப்பட்டது. 

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் இறங்கும் சூழலை அவருக்கு கொண்டு வந்தது, மகன் திருமகன் ஈவெராவின் மறைவு. 2023 ஆண்டு அவரது மூத்த மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அந்த தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று, 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் சென்றார். காங்கிரஸ் கட்சியிலும், தமிழக அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு பேரிழப்பு.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கேவலமான பேச்சு.. நீங்க எல்லாம் நாட்டை ஆண்டால் அவ்வளவுதான்.. உதயநிதியை விளாசிய குஷ்பு!
கேவலமான பேச்சு.. நீங்க எல்லாம் நாட்டை ஆண்டால் அவ்வளவுதான்.. உதயநிதியை விளாசிய குஷ்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget