காஞ்சிபுரத்தில் பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் ரூ.18.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.எம்பி. க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வருவாய்த்துறை சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ.18.53 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.13.11 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 80 பேருக்கு ரூ.3.82 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் உட்பட மொத்தம் 748 பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இதே விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர் ஆகிய வட்டாரங்களில் ரூ.46.80 லட்சம் மதிப்பிலான புனரமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த சேவைமையக் கட்டிடத்தையும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காகவும் அதற்குறிய கல்வெட்டினை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
மக்கள் தயாராக உள்ளனர்
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் காந்தி பேசுகையில், யாரும் எதிர்பாராமல் அளவிற்கு சிந்தித்து முதலமைச்சர் செயல் பட்டு வங்கி கணக்கில் பணம் அளித்து வருகிறார். மத்திய அரசு போடும் கணக்கை முறியடித்து யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு முதலமைச்சர் முடிவுக்கு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு, கை பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு மாதம்தோறும் வழங்கும் உதவி தொகையில் இருந்து கூடுதலாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தயாராக உள்ளார்கள் தேர்தல் எப்பொழுது, வரும் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலினை அவர்களை அமர வைக்க தயாராக இருப்பதாக கைத்தறி மற்றும் துணி தொழில் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி, ஒன்றியக்குழுவின் தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநெல்லி.பாபு, ஞானசேகரன், ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.























