Durga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோர மூர்த்தி விழாவினை முன்னிட்டு கொட்டும் மழையிலும் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபாடு செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அகோர மூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க அகோர மூர்த்தி திருநாளன்று கோவிலுக்கு வந்தார் துர்கா ஸ்டாலின். இதனையடுத்து துர்கா ஸ்டாலின் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலை வளம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்வித்தார் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சுவாமி அம்பாள் மற்றும் புதன் பகவான் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்தனர்.
கொட்டும் மழையில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபடும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.