Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
பீகாரில் 20 ஆண்டுகளாக CM இருக்கையில் அமர்ந்திருக்கும் நிதிஷ் குமார் அந்தப் பதவியை தக்க வைப்பாரா? 36 வயதில் முதலமைச்சர் ஆவாரா தேஜஸ்வி யாதவ்? கருத்துக்கணிப்பை பொய்யாக்கும் வகையில் ராகுல்காந்தியின் பிரச்சாரம் கைகொடுக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளதாக உள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையில் மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டி என 3 அணிகள் களமிறங்கின. பீகார் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.9 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிய போகிறது.
அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி இருக்கிறது. 2005ம் ஆண்டில் இருந்து பீகாரின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. எத்தனை கூட்டணி மாறினாலும் சிஎம் இருக்கையில் அவரை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பீகாரின் அதிகார அமைப்பில் அவர் முற்றிலும் இன்றியமையாதவராக மாறிவிட்டார். நிதிஷ்குமார் இன்றி பீகார் மாநில அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கினார். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அங்கீகாரத்தை அவர் எட்டாவிட்டாலும், யார் ஆட்சி நிலவ வேண்டும் என்பதை உறுதி செய்யும் சக்தியை கொண்டவராக இருக்கிறார்.
அதே நேரத்தில் எதிர் தரப்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். 36 வயதான தேஜஸ்வி இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து களமாடிய நிலையில் அது தனக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளன.
அதுவும் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 10-15 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு, SIR, வாக்கு திருட்டு என பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்து ஆதாரத்துடன் பீகாரில் சூறாவளி பிரச்சாரம் செய்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ராகுல்காந்தியின் பிரச்சாரம் அவருக்கு கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
[8:26 am, 14/11/2025] Jayapriya Ravichandran Abp: பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன
நிதிஷ் குமார் தலைமையில் களமிறங்கிய ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி
வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்லி பாஜக அலுவலகத்தில் தயாராகும் இனிப்புகள்
கருத்துக்கணிப்புகள் NDA கூட்டணிக்கு சாதகமாக வந்த நிலையில், முன்கூட்டியே இனிப்புகளை தயார் செய்யும் பாஜகவினர்





















