மேலும் அறிய
Advertisement
Vandalur Zoo: வண்டலூரில் டபுள் என்ஜாய்மென்ட் காத்து கிடக்கு.. அன்னிக்கு லீவு இல்லையா..? வெளியான ஸ்வீட் அறிவிப்பு!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வருகின்ற, ஓணம் பண்டிகை அன்று செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park (AAZP) )
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம்.
2000 விலங்குகள் ( vandalur zoo animals )
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.
பூங்காவிற்கு விடுமுறை ( vandalur zoo open today )
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 29 ஆம் தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகை ( onam 2023 ) முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு ( vandalur zoo entry fee 2023 )
பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது. இதை உயர்த்தி ரூ.200 நுழைவு கட்டணம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டில் இருந்து, வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டண விலை உயர உள்ளது. இந்த கட்டண உயர்வு ஒரு வாரத்திற்கு உள்ளாக, அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று இதர சேவைக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை இன்னும் வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion